State
திமுக மற்றும் காங்கிரஸின் மெகா கூட்டணி கனவை கானல் நீராக்கிய தமிழக கட்சி? செய்வதறியாமல் திகைத்து நிற்கும் திமுக

திமுக மற்றும் காங்கிரஸின் மெகா கூட்டணி கனவை கானல் நீராக்கிய தமிழக கட்சி? செய்வதறியாமல் திகைத்து நிற்கும் திமுக
மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசின் ஆட்சி காலம் முடிவடைவதால் விரைவில் நாடாளமன்ற தேர்தல் வருவதையடுத்து சமீப காலங்களில் ஊடகங்கள் ஒவ்வொன்றும் தமிழக மற்றும் தேசிய கட்சிகளின் கூட்டணி குறித்து பரபரப்பான பல செய்திகளை வெளியிட்டு வருகின்றன. மேலும் பெரும்பாலான ஊடகங்கள் திமுக அமைத்துள்ள மெகா கூட்டணிக்கே வெற்றி வாய்ப்பு உள்ளதாகவும் கருத்துக்கணிப்புகளை வெளியிட்டன.திமுக தலைவர் ஸ்டாலின் தேசிய அளவில் முக்கியத்துவம் பெறுகிறார் என்றும் கூட சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.
கடந்த தேர்தலிலும் சமீபத்தில் நடந்த RK நகர் இடைத்தேர்தலிலும் தமிழகத்தில் உள்ள சிறு கட்சிகளை கூட விட்டு வைக்காமல் மெகா கூட்டணி அமைத்த திமுக கடைசியில் தோல்வியை தழுவியது.அதுவும் RK நகர் இடைத்தேர்தலில் திமுக மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டு படுதோல்வி அடைந்தது.
திமுகவின் நிலைமை இவ்வாறு இருக்க திமுக தலைவர் கருணாநிதி இல்லாமலும்,RK நகரில் நடந்த இடைதேர்தலில் அடைந்த படுதோல்விக்கு பிறகும் சந்திக்கும் இந்த தேர்தலில் அந்த கட்சி எப்படியாவது பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்று விட வேண்டும் என்று தீர்மானித்து தமிழகத்தில் உள்ள சிறிய கட்சிகளை கூட விட்டு வைக்காமல் பெரும்பாலான கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிட அக்கட்சி திட்டமிட்டுள்ளது.
இதற்காக தங்கள் கூட்டணியின் பலத்தை உறுதிப்படுத்துவதோடு மட்டுமல்லாமல் தற்போதைய ஆளும்கட்சியான அதிமுகவுடன் தமிழகத்தில் உள்ள முக்கிய கட்சிகளான பாமக மற்றும் தேமுதிக போன்றவை கூட்டணி சேர்ந்து விடாமலும் திரைமறைவில் செயல்பட்டு வருகிறது. இதற்காக தனது கூட்டணி கட்சிகளை கொண்டு அதிமுக உடன் கூட்டணி சேர வாய்ப்புள்ள கட்சிகளை சம்பந்தமில்லாமல் தொடர்ந்து விமர்சித்து வருகிறது.
தமிழக ஊடகங்கள் முதல் தேசிய ஊடகங்கள் என அனைத்தும் காங்கிரஸ் மற்றும் திமுக கூட்டணியை மெகா கூட்டணி என்று குறிப்பிட்டாலும் தமிழகத்தை பொறுத்த வரை அந்த நிலை இங்கு இல்லை என்பதே உண்மை. கடந்த சட்டமன்ற தேர்தலில் தனித்து நின்ற பாமக 50 க்கும் மேற்பட்ட சட்டமன்ற தொகுதிகளில் திமுக மற்றும் அதிமுகவின் வெற்றி தோல்வியை தீர்மானித்தது மேலும் பெரும்பாலான தொகுதிகளில் அதிமுக மற்றும் திமுகவிற்கு போட்டியாக இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களை பிடித்து தமிழகத்தின் மூன்றாவது பெரிய கட்சியாக தனது வாக்கு வங்கியை நிலைநிறுத்தி காட்டியுள்ளது.
அந்த வகையில் தற்போது நடைபெறவுள்ள நாடாளமன்ற தேர்தலிலும் பாமக தனியாக நிற்கும், மேலும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவிற்கு பின் தற்போதைய ஆளும் கட்சியான அதிமுகவும் உட்கட்சி பிரச்சனையால் இரண்டாக பிளவு பட்டதால் தினகரன் அணியான அமமுகவும் அதிமுக வாக்குகளை பிரிக்கும்.
அதனால் கடந்த தேர்தலில் பெற்ற வாக்குகளில் எந்த இழப்பும் இல்லாமல் திமுக நிலைத்த வாக்கு வங்கியை கொண்டதாக நினைக்கும் ஸ்டாலின் திமுக சுலபமாக வெற்றி பெற்று விடும் என்று எதிர்பார்த்திருந்தார். இவ்வாறு எதிர்பார்ப்பில் இருந்த திமுக தலைவர் ஸ்டாலினுக்கு பாமக கூட்டணி அமைத்து போட்டியிட தயார் என்று அறிவித்தது பெரும் ஏமாற்றத்தை அளித்தது.
அந்த வகையில் விரைவில் நடைபெற உள்ள நாடாளமன்ற தேர்தலிலும் பெரும்பாலான தொகுதிகளில் திமுகவின் வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் சக்தியாக பாமக உள்ளது என்பது சமீப காலங்களில் நடைபெரும் அரசியல் விவாதங்களில் தெளிவாக தெரிகிறது. பாமக மற்றும் தேமுதிக என இரண்டு கட்சிகளும் அதிமுகவுடன் இணையும் பட்சத்தில் திமுக மற்றும் காங்கிரஸ் அமைத்துள்ள கூட்டணிக்கு சமமான கூட்டணியாக இது அமையும். மத்தியில் மோடி அரசின் மீதுள்ள அதிருப்தி மற்றும் தமிழகத்தில் நடைபெரும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசின் மீதுள்ள அதிருப்தி காரணமாக சுலபமாக வெற்றி பெற்று விடலாம் என்று எதிர்பார்த்திருந்த காங்கிரஸ் மற்றும் திமுகவிற்கு இந்த கூட்டணி கடினமான போட்டியாக அமையும் என்பது அரசியல் ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.
மேலும் உடனுக்குடன் இதுபோன்ற மாநில செய்திகள் | தேசிய செய்திகள் | உலக செய்திகள் | விளையாட்டு செய்திகள் | வர்த்தக செய்திகள் | தொழில்நுட்ப செய்திகள்|தமிழக செய்திகள் | நடுநிலையான செய்திகள் | இந்திய செய்திகள் மற்றும் சினிமா செய்திகள் போன்றவற்றை அறிய News4 Tamil செய்தி இணையதளத்தின் ட்விட்டர் மற்றும் முகநூல் பக்கத்தை பின் தொடருங்கள்.