பாமக நிறுவனர் ராமதாஸ் கருத்தை உறுதி செய்த தமிழக மக்கள் ட்விட்டரில் #தமிழ்நாட்டுவேசிஊடகங்கள் என ட்ரெண்டிங்

0
149

பாமக நிறுவனர் ராமதாஸ் கருத்தை உறுதி செய்த தமிழக மக்கள் ட்விட்டரில் #தமிழ்நாட்டுவேசிஊடகங்கள் என ட்ரெண்டிங்

சமீபத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின்  தமிழ்ப் படைப்பாளிகள் பேரியக்கத்தின் சார்பில் ‘வளர்க்கப்படுகின்ற வெறுப்பு அரசியல்’ என்ற தலைப்பில் சென்னையில் கருத்தரங்கம் ஒன்று நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் பேசிய மருத்துவர் ராமதாஸ், டெலகிராப் என்று கொல்கத்தாவிலிருந்து வரும் ஒரு பத்திரிக்கையுடைய நிருபர் இங்கு இருக்கிறான். அவன் என்னிடம் ‘சார், மரத்தை வெட்டிவிட்டீர்களாமே’ என்று கேட்கிறான். 

அப்போது  தம்பி இந்த கேள்விக்கு ஏற்கனவே நான் 100 தடவை பதில் சொல்லிவிட்டேன். திரும்பவும் நீ கேட்கிறாய் என்றால், ராமதாஸ் என்பவன் மரத்தை வெட்டுபவன் என்று மக்களுக்குப் பதிய வைக்க வேண்டும் என்பதற்காகத்தான் கேட்கிறாய். 

இனிமேல் ஏதாவது போராட்டம் என்றால் மரத்தையெல்லாம் வெட்ட மாட்டோம். இதேபோல கேள்வி கேட்கும் ஆளை வெட்டிக்கொன்று விட்டு போராட்டம் செய்கிறோம் அப்போது மரத்தை வெட்டுபவன் என்பதற்கு பதில் மனிதனை வெட்டுவதை பற்றி கேளுங்கள் என்று பதில் அளித்தாக கடும் கோபத்துடன் கூறினார்.

மேலும் தொடர்ந்து பத்திரிகையாளர்களைத் கடும் சொற்களை கொண்டு விமர்சித்தவர், ஏண்டா நாய்களா, கம்னாட்டி பசங்களா, நான் வைத்த மரத்தை வந்து பாருங்கள் என்கிறேன். ஒரு வருஷமாக இது வரை எந்த நாயும் பார்க்கவில்லை என்றார்.மரத்தை வெட்டியதை பற்றி மட்டும் பேசும் நீங்கள் நான் மரம் வைத்ததை பற்றி ஏன் பேச மறுக்கிறீர்கள் என்றும் பேசினார்.

நான் சாதி, மதத்துக்கு அப்பாற்பட்டவன்,தமிழக மக்கள் அனைவருக்காகவும் தான் இந்த ராமதாஸ் 40 ஆண்டுகளாக போராடி வருகிறான் என்றும் அவர் அப்போது குறிப்பிட்டார்.

கடந்த கால வரலாற்றை பார்க்கும் போது தமிழக அரசியலில் மக்கள் நலனுக்காக போராடுவதில் பாமக என்றும் முதலில் இருந்துள்ளது.அந்த வகையில் அந்த கட்சியின் மக்கள் நலன் சார்ந்த போராட்டங்கள் நடக்கும் போது கண்டு கொள்ளாமல் இருக்கும் பெரும்பான்மையான ஊடகங்கள் ஏதேனும் ஒரு எதிர்மறையான செய்தியை மட்டும் தொடர்ந்து மக்கள் மத்தியில் தெரிவித்து வருகின்றன. மேலும் தங்களுக்கு பிடித்த யாரையோ விளம்பரபடுத்தவும் அவர்களை திருப்தி படுத்தும் நோக்கிலும் இந்த ஊடகங்கள் செயல்படுவதாக தொடர்ந்து குற்றம்சாட்டபட்டு வருகிறது.

சமீபத்தில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமியிடம் தொடர்ந்து ஒரு குறிப்பிட்ட சாதி மக்கள் ஏன் உங்களுக்கு வாக்களிக்கவில்லை என்று கேட்ட போது அந்த நிருபரை பார்த்து நீ என்ன சாதி எந்த ஊர் என்று கிருஷ்ணசாமி கேள்விகளை முன் வைத்தார். இதை சற்றும் எதிர்பார்க்காத பத்திரிக்கையாளர்கள் அவருக்கு எதிராக கூச்சலிட்டு பின் அமைதியாகினர்.அங்கும் அந்த நிருபர் எதோ ஒரு அரசியல் கட்சியை திருப்தி படுத்தவே அது போன்ற கேள்விகளை முன் வைத்ததாக கூறப்பட்டது.

தமிழக ஊடகங்களுக்கு எதிரான குரல்கள் எழுந்த நிலையில் தற்போது தேவையில்லாத செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து மக்கள் பிரச்சனைகளை மறந்து விட்டதற்காக தமிழக ஊடகங்களை கண்டிக்கும் விதமாக #தமிழ்நாட்டுவேசிஊடகங்கள் என்ற பெயரில் ட்விட்டரில் இணையதளவாசிகள் விமர்சனம் செய்து வருகின்றனர்.

இவ்வாறு விமர்சனம் செய்தது இந்திய அளவில் ட்விட்டர் ட்ரெண்டிங்கில் #தமிழ்நாட்டுவேசிஊடகங்கள் என்ற ஹேஷ் டேக் முதலிடத்தில் உள்ளது.

தமிழகத்தில் வரலாறு காணாத கடுமையான தண்ணீர் பஞ்சம் நிலவி வருகிறது. இது ஒருபுறம் இருக்க மறுபுறம் ஹைட்ரோகார்பன் போன்ற விவசாயிகளுக்கு எதிரான திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. கூடங்குளத்தில் அணுக்கழிவு மையம் அமைக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கு சமூக ஆர்வலர்களும், எதிர்க்கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. மேலும் இது போன்ற தமிழகத்தில் பல பிரச்சனைகள் உள்ளன.

இந்நிலையில் நேற்று மயிலாப்பூரில் உள்ள ஒரு பள்ளியில் தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் நடைபெற்றது. வெறும் 1600 பேர் சம்பந்தப்பட்ட அந்த தேர்தலை பெரும்பாலான ஊடகங்கள் பல நாள் முழுக்க நேரலை செய்தன. தேர்தல் நடக்கும் இடத்தில் தான் ஒட்டுமொத்த தமிழக ஊடகங்களும் குவிந்திருந்தன. மேலும் அங்கு வந்திருந்த ஒவ்வொரு நடிகரிடமும் பேட்டி எடுத்து ஒளிபரப்பி வந்தன.

இது மட்டுமல்லாமல் நேற்று இரவு பிரபல தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் தொடங்கியது. நிகழ்ச்சி தொடங்கியவுடன் அதில் பங்கேற்கும் போட்டியாளர்கள் குறித்து நேற்று நள்ளிரவு வரை தொடர்ந்து செய்தியை பதிவிட்டு வந்தன. தண்ணீர் பற்றாக்குறை உட்பட மற்ற பிரச்சனைகள் அனைத்தும் மறக்கடிக்கப்பட்டன. 

இதனை கண்டிக்கும் விதத்தில் நடிகர் சங்க தேர்தலில் வாக்களித்த நடிகர் விவேக் செய்தியாளர்களிடம் ஊடகங்களின் இந்த பொறுப்பற்ற தன்மை குறித்து பேசினார். அவர் கூறுகையில், 2000 நபர்கள் சம்பந்தப்பட்ட நடிகர் சங்க தேர்தலுக்கு இவ்வளவு முக்கியத்துவம் அளிப்பதற்கு நன்றி. அதே நேரத்தில் வேறு பல நிகழ்வுகளும் தமிழகத்தில் நடந்துகொண்டிருக்கின்றன. சென்னை அருகே சிட்லபாக்கம் ஏரியை பொதுமக்களே தூர் வாரி வருகின்றனர். இதுபோன்று பல நிகழ்வுகள் நடைபெறுகிறது. இதே போல மற்ற பிரச்சனைகளுக்கும் முக்கியத்துவம் கொடுங்கள் என்று நாசுக்காக ஊடகங்களின் செயலை கண்டித்தார்.

மருத்துவர் ராமதாஸ் மற்றும் நடிகர் விவேக் போன்றவர்கள் ஊடகங்களை கண்டித்த இந்நிலையில் நேற்று இரவு முதலே #தமிழ்நாட்டுவேசிஊடகங்கள் என்ற ஹேஷ் டேக் ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகா ஆரம்பித்தது. தண்ணீர் பிரச்சனை போன்ற பல பிரச்சனைகளை ஒளிபரப்பாமல் நடிகர் சங்க தேர்தலை மட்டும் நாள் முழுமைக்கும் ஒளிபரப்பியது குறித்தும்,தமிழக ஊடகங்கள் சிலவற்றின் உரிமையாளர்களின் மோசடி குறித்தும் கருத்துகள் பதிவிட்டு மேற்குறிப்பிட்ட #தமிழ்நாட்டுவேசிஊடகங்கள் ஹேஷ் டேக்கை ட்ரெண்ட் செய்தனர். அந்த ஹேஷ் டேக் தற்போது இந்திய அளவில் முதலிடத்தில் உள்ளது.

நடுநிலை தவறி எதோ ஒரு அரசியல் கட்சிக்கு ஆதரவாக செயல்படும் சில ஊடங்களின் செயல்பாடு வன்மையாக கண்டிக்கத்தக்கது என்றாலும் இதுபோன்ற வார்த்தைகளை தவிர்த்து அதை நாகரிகமான வார்த்தைகள் கொண்டு கண்டிக்கலாம் என்பதே பெரும்பாலான மக்களின் கருத்தாக உள்ளது. எது எப்படியோ பாமக நிறுவனர் ராமதாஸ் ஆரம்பித்து வைத்ததை கொண்டு தமிழக மக்கள் ஊடகங்களை வெளுத்து வாங்க தொடங்கி விட்டனர்.

author avatar
Parthipan K