தமிழகத்திற்கு மேலும் 3 ரயில்கள்!

0
81
Train Ticket Reservation Starts Today
Train Ticket Reservation Starts Today

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்ட நிலையில், புலம் பெயர்ந்த தொழிலாளர்களை அவர்கள் மாநிலத்துக்கு செல்லும் வகையில் ஷார்மிக் ரயில்கள் இயக்கப்பட்டன. அதனை தொடர்ந்து 20 வழித்தடங்களில் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன.

அதன் தொடர்ச்சியாக கடந்த ஜூன் 1ம் தேதியிலிருந்து 100 சிறப்பு பயணிகள் ரயில் இயக்கப்படும் என மத்திய அரசு அறிவித்திருந்தது. தமிழகத்தில் கொரோனா தொற்று உச்சத்திலிருப்பதால் ரயில் போக்குவரத்து தற்போதைக்கு வேண்டாம் என முதல்வர் பழனிசாமி கோட்டு கொண்டதால் தமிழகத்திற்கான ரயில்கள் அப்போது அறிவிக்கப்படவில்லை.

இதனை தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகமில்லாத தமிழக நகரத்தினிடையே ரயில் போக்குவரத்தை துவங்க தமிழகத்தின் சார்பில் தென்னக ரயில்வேவிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.

இதனையடுத்து இதற்கு அனுமதியளித்த தென்னக ரயில்வே கடந்த ஜூன் 1ம் தேதி முதல் கீழ்கண்ட ரயில்களை அறிவித்து இயக்கி வருகிறது .

ரயில்கள் விவரம் :

கோயம்புத்தூர் – மயிலாடுதுறை ஜன சதாப்தி சிறப்பு ரயில்மதுரை- விழுப்புரம் இன்டர்சிட்டி அதிவிரைவு ரயில்திருச்சி – நாகர்கோவில் அதிவிரைவு ரயில்கோயம்புத்தூர் – காட்பாடி இன்டர்சிட்டி அதிவிரைவு ரயில்

கோயம்புத்தூர்-மயிலாடுதுறை ஜன சதாப்தி சிறப்பு ரயில் செவ்வாய்க்கிழமை தவிர அனைத்து நாட்களும் இயக்கப்படும் என்றும் மற்ற மூன்று ரயில்கள் வாரத்தின் அனைத்து நாட்களும் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் தற்போது மேலும் 3 ரயில்களை இயக்க தமிழக அரசு சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தெற்கு ரயில்வேக்கு எழுதப்பட்ட கடிதத்தில் திருச்சி – அரியலூர் – விழுப்புரம் செங்கல்பட்டு மார்க்கம், அரக்கோணம்- காட்பாடி- கோயம்புத்தூர் மார்க்கம், திருச்சி – கும்பகோணம் – மயிலாடுதுறை – விழுப்புரம் மார்க்கமாக செங்கல்பட்டு வரை பயணிகள் ரயில் இயக்கும்படி கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

author avatar
Parthipan K