பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு – வழிகாட்டுதல் விதிகள் அறிவிப்பு

0
56

கொரோனா நோய்ப் பரவல் காரணமாக ஒத்தி வைக்கப்பட்டிருந்த 10ம் வகுப்பு பொதுத் தேர்வு வரும் ஜூன் 1 முதல் 12 ஆம் தேதி வரை 10ம் வகுப்புக்கான பொதுத் தேர்வு நடைபெறும் என பள்ளி கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்திருந்தார். 4ம் கட்ட ஊரடங்கு வரும் மே 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதால், 10ம் வகுப்பு பொது தேர்வை ஜூன் 15ம் தேதிக்கு தள்ளி வைப்பதாக அறிவித்தார்.

கொரோனா உச்சம் பெற்றுள்ள இந்நிலையில் இந்த தேர்வு அவசியமா என்ற கேள்வியை பெற்றோர்கள், சமூக ஆர்வலர்கள் எழுப்பி வரும் நிலையில் பள்ளி கல்வித்துறை மற்றும் தேர்வுத் துறை பொதுத் தேர்வை நடத்த மும்முரமாக வேலை செய்து வருகிறது.

இந்நிலையில் தேர்வு எழுதும் மாணவர்களுக்கான புதிய வழிகாட்டுதல் விதிகளை அரசு வெளியிட்டுள்ளது.

வெளியூர்களிலிருந்து வரும் மாணவர்கள் வீடுகளில் தனிமைப்படுத்த தேவையில்லை
வெளியூர்களிலிருந்து வரும் மாணவர்கள் நேரடியாக தேர்வு எழுதலாம்
வெளியூர்களிலிருந்து வரும் மாணவர்களை தனி அறையில் அமர வைக்க வேண்டும்.
மாணவர் விடுதிகளை வரும் 11 ம் தேதி முதல் தேர்வுநாள் முடியும் வரை திறந்து வைக்க வேண்டும்.

இவ்வாறு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
Parthipan K