தமிழகத்தில் 12 ஆயிரத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு!

0
63
corona
corona

தமிழகத்தில் 12 ஆயிரத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை அதிதீவிரமாக பரவி வருகிறது. கட்டுப்படுத்த கட்டுப்பாடுகள் விதித்தாலும், ஏற்கனவே எத்தனை பேருக்கு பரவியுள்ளது என்று தெரியாத சூழலில் தமிழகம் உள்ளது.

இந்நிலையில், நேற்று ஒரு லட்சத்து 10 ஆயிரம் பேருக்கு நடத்தப்பட்ட ஆர்.டி.பி.சி.ஆர். டெஸ்டில் 11,681 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில், சென்னையில் மட்டும் 3,750 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டில் 947 பேருக்கும், கோவையில் 715 பேருக்கும் அதிகபட்சமாக பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

பெரம்பலூரில் மட்டும் ஒற்றைப்படையில் பாதிப்பு இருந்த நிலையில், தற்போது அங்கும் 10 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒருசில மாவட்டங்களில் மட்டுமே இரட்டை இலக்கத்தில் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மற்ற அனைத்து மாவட்டங்களிலும் நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டு வருகிறது.

நேற்று 7,071 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், மொத்தம் சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 84,361 ஆக அதிகரித்துள்ளது. இதில், சென்னையில் மட்டும் சிகிச்சை பெறுவோரின் என்னிக்கை 29,256 ஆக உள்ளது.

தமிழகத்தில் கொரோனா ஆரம்பித்ததில் இருந்து நேற்றுவரை 10,25,059 பேருக்கு தொற்று பாதித்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது. நேற்று 53 பேர் உயிரிழந்திருப்பதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளதால், கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 13,258 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா தொற்று கண்டறியப்படுவதே இவ்வளவு என்றால், மருத்துவமனைக்கு செல்லாமல் இன்னும் எத்தனைப்பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் என தெரியவில்லை. வரும் நாட்களில் பாதிப்பு மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. இதனால், பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே செல்லும் போது கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும், கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டும் என்றும் மருத்துவ வல்லுநர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.