இணை நோய் இல்லாத 27 வயது இளம்பெண் உட்பட 12 பேர் பலி! தமிழகத்தில் அதிகரிக்கும் உயிரிழப்பால் அச்சம்!

0
80
tn corona
tn corona

இணை நோய் இல்லாத 27 வயது இளம்பெண் உட்பட 12 பேர் பலி! தமிழகத்தில் அதிகரிக்கும் உயிரிழப்பால் அச்சம்!

தமிழகத்தில் இரண்டாம் அலை கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வருதால், இரவு நேர ஊரடங்கு நடைமுறையில் உள்ளது. முகக்கவசம் கட்டாயம் என்றும் அறிவிக்கப்பட்டு, ஆங்காங்கே அதிகரிகள் ஆய்வு செய்து அபராதம் விதித்து வருகின்றனர்.

கட்டுப்பாடுகள் எவ்வளவு விதித்தாலும், நாளுக்குநாள் தொற்று அதிகரித்துக்கொண்டே செல்கிறது. நேற்று ஒரு லட்சத்து 22 ஆயிரம் பேருக்கு ஆர்டிபிசிஆர் டெஸ்ட் எடுக்கப்பட்டுள்ளது. இதில், 13,776 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதில், சென்னையில் மட்டும் 3,842 பேருக்கும், செங்கல்பட்டில் 985 பேருக்கும், கோவையில் 889 பேருக்கும் அதிக அளவாக பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

பெரம்பலூரில் மட்டுமே மிகக் குறைந்த அளவாக 10 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒருசில மாவட்டங்களைத் தவிர மற்ற ஆனைத்து மாவட்டங்களிலும் நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால், தமிழகத்தில் மொத்தம் சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 95,048 ஆக அதிகரித்துள்ளது.

இது ஒருபுரம் இருக்க உயிரிழப்பும் நேற்று 78 ஆக அதிகரித்துள்ளது. இதில், 27 வயது இளம்பெண் ஒருவர் உட்பட 12 பேருக்கு எந்தவித இணை நோய்களும் இல்லை என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இணை நோய் இல்லாத, அதிலும் மிகவும் குறைந்த வயதில் இருப்பவர்களும் உயிரிழந்திருப்பது மக்களிடையே அச்சத்தை அதிகரிக்கச் செய்துள்ளது.

ஏற்கனவே வட மாநிலங்களில் உயிரிழப்புகள் எண்ணிக்கையை பார்க்கும் போது, மக்கள் செய்வதறியாது தவித்து வருகின்றனர். இதனால், பெரும்பாலான மக்கள் தாங்களாகவே தேவையில்லாமல் வெளியே சுற்றுவதைத் தவிர்த்து வருகின்றனர்.