நடப்பு ஆண்டில் பள்ளி பாட திட்டங்கள் குறைக்கப்படுகிறதா?

0
48

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாத இறுதியில் மூடப்பட்ட பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்று இன்னும் சரி வர தெரியவில்லை.

தற்போதைக்கு ஆகஸ்ட் அல்லது செப்டம்பரில் பள்ளிகள் திறக்கப்படலாம் என கூறப்பட்டாலும், தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா தொற்றின் நிலை நீடித்தால் ஆகஸ்ட் மாதம் கூட பள்ளி துவங்குவது சந்தேகம் தான்.

நமது கல்வியாண்டின் படி ஜூன் மாதத்தில் அடுத்த கல்வியாண்டு துவங்கிவிடும். செப்டம்பரில் குறிப்பிட்ட அளவு பாடங்கள் எடுத்து முடிக்கப்பட்டு காலாண்டு தேர்வுகள் நடத்தப்படும். ஆனால் தற்போதைய நிலவரப்படி செப்டம்பரில் தான் பள்ளிகள் திறக்கும் என்ற நிலை இருப்பதால் கல்வியாண்டிற்குள் எவ்வாறு பாடத்திட்டங்களை மாணவர்களுக்கு எடுத்து முடிக்க முடியும் என்ற கேள்வி எழுந்துள்ளது. ஒரு வேளை பாடத் திட்டங்களை அப்படியே எடுத்து முடிக்க முயன்றாலும் அது மாணவர்களுக்கு பெரும் சுமையாக மாற வாய்ப்புள்ளது.

எனவே இது குறித்து விவாதித்து பரிந்துரைக்க பள்ளி இயக்குனர் தலைமையில் சிறப்பு குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

இதில் சிலர் பாடத்திட்டங்களைக் குறைக்கலாம் என்றும் சிலர் அவ்வாறு குறைத்து மாணவர்களுக்கு அடிப்படையை சொல்லி கொடுக்காமல் அடுத்த வகுப்பிற்கு அனுப்பினால் அது பாடங்களை புரிந்து கொள்வதில் அவர்களுக்கு சிக்கலை ஏற்படுத்தும் என கருத்து தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாடத் திட்டங்களை குறைப்பதற்குப் பதில் கூடுதல் பாடங்கள் இருந்தால் அதை தவிர்த்து விட்டு மற்ற பாடங்களை எடுக்கலாம் என்ற கருத்தும் முன் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இது குறித்து சம்மந்தப்பட்ட கல்வியாளர்கள், ஆசிரியர்களின் பரிந்துரையை கேட்டறிந்த பின்னரே இறுதி முடிவு எடுக்கப்படும் என தெரிகிறது.

author avatar
Parthipan K