அன்பழகனுக்கு உறுதியளித்த முதல்வர் பழனிச்சாமி

திமுகவின் சென்னை மேற்கு மாவட்டச் செயலாளாரும், திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினறுமான ஜெ. அன்பழகன் கடந்த சில தினங்களுக்கு முன் சென்னை குரோம்பேட்டையிலுள்ள ரெலா மருத்துவமனையில் உடல்நிலை பாதிப்பால் அனுமதிக்கப்பட்டார்

அவருக்கு கொரோனா அறிகுறி இருந்த காரணத்தால், அவருக்கு கொரோனா பரிசோதனை எடுக்கப்பட்டது. சோதனையின் முடிவில் அவருக்கு கொரோனா தொற்று உறுதியாக அவரை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்த மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தனர்

ஏற்கனவே அவருக்கு சில உடல் உபாதைகள் இருந்த காரணத்தால் அவர் உடல்நிலை மோசமடைந்து வெண்டிலேட்டர் கருவி பொருத்தப்பட்டு அதன் மூலம் சுவாசித்து வந்தார்

இது தொடர்பாக நேற்று மாலை அறிக்கை வெளியிட்ட ரெலா மருத்துவமனை அவர் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும், கடந்த 48 மணி நேரத்தில் உடல்நிலையில் எந்த வித முன்னேற்றமும் இல்லை எனவும், 80% அவர் வெண்டிலேட்டர் துனையுடன் சுவாசித்து வருவதாக தெரிவித்திருந்தது

இந்நிலையில் இன்று காலை அவர் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் தற்போது 20% சதவிகிதம் குறைக்கப்பட்டு 60 சதவிகித ஆக்சிஜன் அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து அவர் உடல்நிலை குறித்து கேட்டறிந்த தமிழக முதல்வர் பழனிச்சாமி, அவருக்கு எந்த வித உதவியையும் செய்ய தமிழக அரசு தயாராக இருப்பதாக உறுதியளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Copy

Comments are closed.

WhatsApp chat