ஒமைக்ரான் நோய்த்தொற்று பரவல்! முதலமைச்சர் ஸ்டாலின் இன்று முக்கிய ஆலோசனை!

0
101

ஏற்கனவே கொரோனா தொற்றால் இந்தியா வெகுவாக பாதிப்படிந்திருக்கிறது தற்போது இந்த பாதிப்பிலிருந்து மெல்ல, மெல்ல, இந்தியா விடுபட்டு வருகிறது. அதற்கு முக்கிய காரணம் தடுப்பூசி, தடுப்பூசி செலுத்தும் பணி நாடு முழுவதும் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது.

அதிலும் இந்த தடுப்பூசி செலுத்தும் பணியை மிக வேகமாக செயல்படுத்துவது தமிழக அரசு என்பது மகிழ்ச்சியான செய்தி.

இந்தநிலையில், நாட்டில் புதுடெல்லி, மகராஷ்ட்டிரா, தெலுங்கானா, கேரளா, உட்பட பல்வேறு மாநிலங்களில் புதிய பாதை நோய் தொற்று பரவியிருக்கிறது. இதுவரையில் நாட்டில் 236 பேருக்கு இந்த நோய் வெற்றி உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

தமிழ்நாட்டை பொருத்தவரையில் 34 பேருக்கு இந்த புதிய வகை நோய் தொற்று கண்டறியப்பட்டிருக்கிறது. இதில் 3 பேர் குணம் அடைந்து இருக்கிறார்கள் மேலும் 24 பேரின் மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டிருக்கின்றன.

அதோடு இந்த நோய் தொற்றை முழுமையாக கட்டுப்படுத்துவதற்கு மாநில அரசு தீவிரமாக முயற்சி செய்து வருகிறது. இது தொடர்பாக பல்வேறு அறிவுரைகளை தமிழக சுகாதாரத்துறை அமைச்சகம் அவ்வப்போது வெளியிட்டு வருகிறது, அதோடு தடுப்பூசி செலுத்தும் பணியும் மிக வேகமாக நடைபெற்று வருகிறது.

மேலும் அனைவரும் தடுப்பூசி நிச்சயமாக செலுத்திக்கொள்ள வேண்டும் என்று தமிழக சுகாதாரத் துறை சார்பாக கேட்டுக் கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த சூழ்நிலையில், தமிழ்நாட்டில் புதிய வகை நோய் தொற்று தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக தலைமைச் செயலகத்தில் இன்று காலை 11 மணி அளவில் முதல் அமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை நடத்த இருக்கிறார். இந்த கூட்டத்தில் தடுப்பூசி பணிகளைத் தீவிரப்படுத்துவது, கட்டுப்பாடுகளை விரிவுபடுத்துவது, உள்ளிட்டவை தொடர்பாக ஆலோசிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது.