குழந்தையை வைத்துக் கொண்டு பரிதவித்த பெற்றோர்! உடனடியாக உதவி புரிந்த முதலமைச்சர்!

0
82

சமீபத்தில் நடைபெற்ற தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுகவை தோற்கடித்து திமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைக் கைப்பற்றியது. அதாவது திமுக தனித்து 125 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியில் அமர்ந்து இருக்கிறது.இவ்வளவு பெரிய வெற்றியை திமுக பெற்றதற்கு காரணம் அதிமுகவுக்கு பொதுமக்களிடையே இருந்த அதிருப்திதான் என்று சொல்லப்பட்டாலும் திமுக பல இடங்களில் வெற்றி பெற்று இருந்தாலும் கூட வாக்கு சதவீதத்தை பார்த்தால் மிகவும் குறைவாக தான் இருக்கிறது.அப்படிப் பார்த்தோமானால் திமுக ஸ்டாலின் அவர்களின் அதிர்ஷ்டத்தால் தான் வெற்றி பெற்று இருக்கிறது என்பதை போன்ற ஒரு தோற்றம் ஏற்படுகிறது.

இந்த நிலையில் அவர் முதலமைச்சராக பொறுப்பேற்ற நாள் முதல் தமிழகத்தில் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அதோடு பொதுமக்களுக்கு நேரடியாக சென்று பல உதவிகளையும் புரிந்து வருகிறார். இதனால் பொதுமக்களிடையே அவருடைய செல்வாக்கு சற்று உயர்ந்து இருக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது.இந்த நிலையில், பிறந்து மூன்று மாதங்களே ஆன குழந்தையின் இருதய அறுவை சிகிச்சைக்கு நிதி உதவி வழங்க வேண்டும் என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டிருக்கிறார் தஞ்சை மாவட்டம் திருவையாறு வட்டம் ஐம்பதுமேல் நகரத்தில் வசித்து வருபவர்கள் வசந்த், அகல்யா தம்பதியினர்.

இந்த சூழ்நிலையில்,அகல்யாவிற்கு கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் ஒரு அழகான குழந்தை பிறந்திருக்கிறது. ஆனால் குழந்தை பிறந்த ஒரு சில தினங்களில் மருத்துவர்கள் சொன்ன ஒரு செய்தி வசந்த் மற்றும் அகல்யா தம்பதியினரை அதிர்ச்சி அடைய வைத்தது.அதாவது அந்தத் தம்பதியினருக்கு பிறந்த ஆண் குழந்தைக்கு இருதயத்தில் பிரச்சனை உள்ளது இதன் காரணமாக, அறுவை சிகிச்சை செய்துகொள்ள வேண்டும் என்ற செய்தியை மருத்துவர்கள் அந்த தம்பதிகளிடம் தெரிவித்தார்கள் இதன் காரணமாக அந்த தம்பதியினர் அறுவை சிகிச்சைக்காக குழந்தையை சென்னை கொண்டு சென்றவர்கள். இதய அறுவை சிகிச்சை செய்தால் அதற்கு லட்சக்கணக்கில் பணம் தேவைப்படும் பணத்திற்கு எங்கே போவது என்று இருவரும் வருத்தத்தில் இருந்தார் என்று சொல்லப்படுகிறது.

ஆனாலும் பணம் கிடைத்துவிடும் என்ற ஏதோ ஒரு நம்பிக்கையில் திறந்த என்பது தினங்களே ஆன அந்த குழந்தையை இருதய அறுவை சிகிச்சைக்காக சென்னை மருத்துவமனையில் அனுமதித்தார்கள் இந்த குழந்தையின் சிகிச்சைக்கு நிதி உதவி வேண்டும் என்று தெரிவித்து சமூக வலைதளங்களில் கோரிக்கை ஏற தொடங்கியது முகநூல் மற்றும் சமூக வலைதளங்களில் குழந்தைக்காக பண உதவி செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் எழத் தொடங்கியது.

இதனை கண்ட லட்சக்கணக்கான இணையதள வாசிகள் குழந்தையின் அறுவை சிகிச்சைக்கு தங்களால் முடிந்த பண உதவி செய்து வந்தார்கள். இந்த உதவி செய்து சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாக பரவிய சூழ்நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் காதுகளுக்கும் இது சென்றிருக்கிறது இதனை கண்ட ஸ்டாலின் அந்த குழந்தையின் அறுவைசிகிச்சைக்கு தேவையான இரண்டரை லட்சம் ரூபாயை வழங்க உத்தரவிட்டு இருக்கிறார்.

இதுகுறித்து முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டிருக்கின்ற ஒரு அறிவிப்பில் அவர் தெரிவித்திருப்பதாவது, தஞ்சை மாவட்டம் திருவையாறு வட்டம் ஐம்பது மேல் நகரத்தில் வசித்து வரும் வசந்த் அகல்யா தம்பதியினருக்கு பிறந்து என்பது தினங்களே ஆன குழந்தையின் இருதய அறுவை சிகிச்சைக்காக சென்னை மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட செய்தி அறிந்து மிகவும் வருத்தம் அடைந்தேன் என கூறியிருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.

அதோடு அந்த குழந்தையின் இருதய அறுவை சிகிச்சைக்கு தேவையான இரண்டரை லட்சம் ரூபாயை முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து உடனடியாக வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டு இருக்கிறேன் என ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார். அந்த குழந்தையின் நிலையையும் அந்த குழந்தையின் பெற்றோர் நிலையையும் அறிந்து உடனடியாக நிதியுதவி செய்த முதலமைச்சர் ஸ்டாலினுக்கு இணையதள வாசிகள் உட்பட பலரும் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.