விரைவில் வருகிறது எய்ம்ஸ் மருத்துவமனைக்கு சவால்விடும் வகையில் புதிய மருத்துவமனை! கிண்டியில் அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் ஸ்டாலின்!

0
135

சென்னை கிண்டியிலிருக்கின்ற கிங் நோய் தடுப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவன வளாகத்தில் 1000 படுக்கைகளுடன் கூடிய பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்று வருகிறது. இதில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்று கொண்டு மருத்துவமனை கட்டிடம் கட்டுவதற்கான நாட்டிவல்விருக்கிறார்

கிண்டிலிருக்கின்ற கிங் நோய் தடுப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் சார்பாக ஏற்கனவே 8 ஏக்கர் நிலப்பரப்பில் மருத்துவமனை கட்டமைக்கப்பட்டுள்ளது. தற்போது மேலும் 4 ஏக்கர் பரப்பளவில் 6 தளங்களுடன் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை கட்டப்படவிருக்கிறது.

இதற்கான அடிக்கல் நாட்டு விழா தற்சமயம் நடைபெற்று வருகிறது இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்று கொண்டு கட்டிடம் கட்டுவதற்கான பணிகளை ஆரம்பித்து வைத்தார்.

ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் பன்னோக்கு சிறப்பு மருத்துவமனை அமைக்கப்பட்டு வருகின்ற சூழ்நிலையில், தற்சமயம் 230 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கிண்டியில் பல் நோக்கு சிறப்பு மருத்துவமனை அமைக்கப்படவிருக்கிறது.

டெல்லியிலுள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இணையாக இந்த மருத்துவமனையில் அனைத்து வசதிகளுடன் கூடிய கட்டமைப்பு மேற்கொள்ளப்படவுள்ளது. பொதுப்பணித்துறை அமைச்சர் ஏ .வ.வேலு சுகாதாரத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் சென்னை மாநகர மேயர் ப்ரியா நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் அரசு அதிகாரிகள் உட்பட பல்வேறு தரப்பினரும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றிருக்கிறார்கள்.