பிரதமருக்கு அவசர கடிதம்.எழுதிய முதல்வர்!

0
62

கடந்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்கிய நோய்த்தொற்று நாடுமுழுவதும் பரவியது. இதனை அடுத்து மத்திய மாநில அரசுகள் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தன.இதனை தொடர்ந்து இந்த தொற்று இந்தியாவில் கட்டுக்குள் வரத்தொடங்கியது.கடந்த மார்ச் மாதம் வரை கட்டுக்குள் இருந்த தொற்று திடிரென அதிகரிக்க தொடங்கி இருக்கிறது.

ஒரே நாளில் மூன்றரை லட்சம்பேர் இந்த நோயினால் பாதிக்கப்படுகிறார்கள்.இந்த பாதிப்பை கட்டுப்படுத்துவதற்கு மத்திய, மாநில அரசுகள் மிகத்தீவிரமாக முயற்சித்து வருகிறார்கள்.அதே நேரம் ஆக்ஸிஜன் சிலிண்டர் தட்டுப்பாடு இருந்து வருகிறது. அத்துடன் தடுப்பூசிக்கும் தட்டுப்பாடு ஏற்ப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. ஆகவே தமிழகத்திற்கு இருபது லட்சம் தடுப்பூசி வேண்டும் என பிரதமருக்கு முதல்வர் கடிதம் எழுதியிருக்கிறார்.