வீட்டில் பேட்டி கொடுப்பவரகள் எம்ஜிஆர் ஆகிவிட முடியுமா? ரஜினிக்கு முதல்வர் பதிலடி

0
68

வீட்டில் பேட்டி கொடுப்பவரகள் எம்ஜிஆர் ஆகிவிட முடியுமா? ரஜினிக்கு முதல்வர் பதிலடி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேற்று தனது வீட்டில் செய்தியாளர்களை சந்தித்த போது தமிழகத்தில் இன்னும் ஆளுமையான சரியான தலைவருக்கு வெற்றிடம் இருக்கிறது என்று கூறினார். ரஜினியின் இந்த கருத்துக்கு அரசியல் கட்சி தலைவர்கள் தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வந்த நிலையில் நேற்று நிகழ்ச்சி ஒன்றில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ‘வீட்டில் இருந்து பேட்டி கொடுப்பவரக்ள் எல்லாம் எம்ஜிஆர் ஆகிவிட முடியாது என்றுகூறியுள்ளார்

இந்த நிகழ்ச்சியில் அவர் மேலும் கூறியதாவது: சில பேர் அரசியல் கட்சி தொடங்கவிருப்பதாக பல ஆண்டுகளாக சொல்லி வருகிறார்கள். இன்னும் சிலர் நாங்கள்தான் ஆட்சியைப் பிடிப்போம் என்று சொல்கிறார்கள். இவர்கள் யார் என்பது உங்களுக்கு தெரியும். இவர்கள் பாதி நாள் இங்கே இருப்பார்கள், பாதி நாள் வெளியே எடுப்பார்கள். எங்கே இருப்பார்கள் என்று நாட்டு மக்களுக்கு தெரியும். அவர்களுக்கு எல்லாம் ஒரு பெரிய ஆசை. அறுபது ஆண்டு காலத்திற்கு மேல் வேறு தொழிலில் இருந்துவிட்டு திடீரென இப்போது அரசியலை தொழில் என்று நினைத்துக் கொண்டு இதில் நுழைகிறார்கள்

அரசியல் என்பது தொழில் அல்ல, இது இரவு பகல் பாராமல் உழைத்தால்தான் மக்களின் நன்மதிப்பை பெற முடியும். திடீரென்று அரசியலில் பிரவேசித்து உடனே பதவிக்கு வந்துவிட முடியாது. அப்படிப்பட்ட மக்களும் தமிழ்நாட்டு மக்கள் அல்ல. அதேபோல் வீட்டிலேயே இருந்து பேட்டி கொடுப்பவர் எல்லாம் எம்ஜிஆர் ஆகிவிட முடியாது. உழைத்தால் தலைவராக முடியும்.

இதனைத்தான் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களும் புரட்சித்தலைவி அம்மா அவர்களும் நிரூபித்தார்கள். அரசியலில் எத்தனையோ கட்சி தலைவர்கள் வருக்கிறார்கள், ஆனால் அவர்கள் எல்லாம் சில வருடங்களில் காணாமல் போய் விடுகின்றார்கள். இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தெரிவித்தார்.

author avatar
CineDesk