தளபதி நடிக்கும் “பீஸ்ட்” படத்தின் தலைப்பு மாற்றம்!

0
96

சன் பிக்சர்ஸ் வழங்கும் நெல்சன் இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்கும் படம்தான் பீஸ்ட் . இப்பொழுது படத்தின் தலைப்பு மாற்றம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது.

தளபதி படம் என்றாலே ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான். அதிக ரசிகர்களை கொண்டவர் யார் என்றால் தளபதி விஜய் என்பதில் யாருக்கும் ஐயமில்லை. அவரது படம் வருகிறது என்றாலே மக்கள் திருவிழாவாகக் கொண்டாடுவர். அப்படி தளபதி விஜய் 65 வது படமாக பீஸ்ட் என்ற பெயர் ரசிகர்களின் அதிக ஆர்வத்தை தூண்டியுள்ளது என்றே சொல்லலாம். மாஸ்டர் படத்திற்கு பின் வெளியாகும் விஜய் படம் என்பதால் தமிழகத்தில் மட்டும் இல்லாமல் அனைத்து மாநிலங்களிலும் விஜய் ரசிகர்களிடையே ஒரு ஆர்வத்தை தூண்டியுள்ளது. இப்பொழுது படத்தின் ஒவ்வொரு தகவல்கள் வெளியாகிவரும் நிலையில் அதை டுவிட்டர் மற்றும் சமூக வலைத்தளங்களில் அவரது ரசிகர்கள் அதை ட்ரெண்டாக்கி வருகிறார்கள். அதேபோல் அந்த படத்தின் பெயர் மற்றும் பர்ஸ்ட் லுக் வெளிவந்த பொழுது ட்விட்டரில் ட்ரெண்டிங்கான விஷயமே இதுதான். அவ்வப்பொழுது பீஸ்ட் படத்தின் தகவல்கள் ஒவ்வொன்றாக வெளிவந்த நிலையில் தான் உள்ளது.

இந்த படத்தின் இயக்குனர் கோலமாவு கோகிலா மற்றும் டாக்டர் போன்ற திரைப்படங்களை இயக்கிய இயக்கிய இயக்குனர் நெல்சன் தான். அவரது இயக்கத்தில் தயாராகி வருகிறது. அதே போல சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தில் பூஜா ஹெக்டே ஹீரோயினாக நடித்து வருகிறார். மேலும் பல பிரபலங்கள் இதில் இணைந்துள்ளனர். அதேபோல் இயக்குனர் செல்வராகவன் அவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் இணைந்தது குறிப்பிடத்தக்கதாக கருதப்படுகிறது. அதில் செல்வராகவன் வில்லனாக நடிக்கிறார் என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளது. இதற்கு முன் செல்வராகவன் கதாபாத்திரத்தில் மிஸ்கின் அவர்கள் தேர்வு செய்யப்பட்ட இருந்ததாகவும், இப்போது செல்வராகவன் வில்லனாக நடிக்கிறார் என்றும் தகவல்கள் வெளியாகிஉள்ளது.

இந்த பரபரப்புகளுக்கு நடுவில்தான் இப்பொழுது புதிய செய்தி ஒன்று வந்துள்ளது. இப்பொழுது பீஸ்ட் படத்தின் பெயர் மாற்றம் செய்யப்படும் என்று தகவல் வெளிவந்துள்ளது. ஏனென்றால் தமிழக அரசு விரைவில் தமிழ் திரைப்படங்களுக்கான வரிவிலக்கை 8 விழுக்காடு தள்ளுபடி செய்யவுள்ளதாக தெரியவந்த நிலையில் தமிழ் தலைப்புக்கு மட்டுமே வரிச் சலுகை வழங்கப்படும் என்பதால், பீஸ்ட் என்ற ஆங்கிலத் தலைப்பு மாற்றப்பட அதிக வாய்ப்பு உள்ளதாக திரைத் துறை வட்டாரங்களில் பேசப்படுகிறது.

author avatar
Kowsalya