திருவள்ளூர் மாவட்ட விவசாயிகள் போராட்டம் !! நெல் கொள்முதல் குறித்து புகார்

0
91

திருவள்ளூர் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகளுக்கு முன்னுரிமை அளிக்கமால் , வியாபாரிகளுக்கு முன்னுரிமை அளிப்பதாகவும் புகார் வந்துள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தில் வினியோகிக்கப்படும் நெல் கொள்முதல் நிலையத்தில் வியாபாரிகளுக்கு முன்னுரிமை அளிப்பதாக விவசாயிகள் தரப்பில் புகார் கூறியுள்ளனர். மேலும் விவசாயிகள் நெல் கொள்முதல் செய்யும் நிலையத்தில் மூட்டைக்கு 70 முதல் 100 ரூபாய் வரை கமிஷன் வாங்குவதாக விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் சொர்ணவாரி பருவத்தில் பயிரிடப்பட்ட சுமார் 57 ஆயிரம் ஏக்கர் நெல் பயிர் பயிரிட்டு , தற்போது அறுவடைக்கு தயாராகி வருகிறது.இதனையடுத்து விவசாயிகளிடமிருந்து நெல்லை கொள்முதல் செய்வதற்காக திருவள்ளூர் ,பூண்டி,திருவாலங்காடு, திருத்தணி, எல்லாபுரம், சோழவரம் , வில்லிவாக்கம் ஆகிய பகுதிகளில் விளைவித்த நெல்லை ,ஊராட்சி ஒன்றியங்களில் 21 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விற்கப்பட்ட வருகின்றன.

தமிழ்நாடு நுகர்பொருள் வணிகம் கழகம் சார்பில் செயல்பட்டு வரும் நேரடிக் கொள்முதல் நிலையங்களில் ஊத்துக்கோட்டை ,புலியூர், கிலம்பக்கம்,மற்றும் அதன் சுற்றியுள்ள இடங்களில் இருந்து கொண்டு வரும் நெல் ஈரமாக இருப்பதாக கூறிய அரசு ஊழியர்கள், வியாபாரிகளுக்கு முன்னுரிமையளிப்பதாகவும் ,விவசாயிகளை ஏமாற்றமாகவும் குற்றம்சாட்டப்படுகிறது.

மேலும், கூவம், பேரம்பாக்கம் ,இளஞ்செடி உள்ளிட்ட இடங்களில் நேரடிக் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் கொள்முதல் செய்யும் நெல்லுக்கு 100 ரூபாய் வரை கமிஷன் வசூலிக்கப்படுவதாக விவசாயிகள் கூறினர்.ஒரு மூட்டை 40 கிலோ என அரசு நிர்ணயித்துள்ள நிலையில் ,சரக்கு ஏற்றம் என்று கூறி கூடுதலாக 2 கிலோ நெல் விவசாயிகளிடமும் பெறப்பட்டுள்ளது விவசாயிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

இதனை எதிர்த்து தாமரைப்பாக்கம் கூட்டு சாலையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.மேலும், இதுகுறித்து தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக அதிகாரி ஒருவர் ,விவசாயிகளின் புகார் தொடர்பாகவும்,நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் ,அதற்காக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

author avatar
Parthipan K