கேட்பாரற்று நடுரோட்டில் கிடந்த பச்சிளம் குழந்தை!

கேட்பாரற்று நடுரோட்டில் கிடந்த பச்சிளம் பெண் குழந்தையை பொதுமக்கள் மீட்டு காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்

இன்று காலை திருப்பூர் பெரியார் காலனி பகுதியில் சாலை ஓரமாக யாரும் கேட்பாரற்ற நிலையில் பச்சிளம் பெண்குழந்தை ஒன்று அப்பகுதி பொதுமக்களால் கண்டறியப்பட்டுள்ளது. பிறந்து சில நாட்களே ஆன தொப்புள் கொடி அறுக்கப்பட்ட நிலையில் இருந்த அந்த பச்சிளம் பெண் குழந்தையை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

இந்நிலையில் உடனடியாக அருகிலுள்ள காவல்துறை அலுவலகத்திற்கு பொதுமக்கள் தகவல் கொடுத்துள்ளனர். பின்னர் பொதுமக்கள் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அந்த குழந்தையை எடுத்துச் சென்றனர் .

சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் பின்னர் குழந்தைகள் நல துறையினருக்கு தகவல் அளித்ததையடுத்து குழந்தைகள் நலத் துறையினர் அங்கு வந்தனர். பின்னர் அந்த குழந்தையை தனியார் மருத்துவமனையில் இருந்து மீட்டு திருப்பூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

பிறந்து சில நாட்களே ஆகும் பச்சிளம் குழந்தை சாலையில் கேட்பாரற்று கிடந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!
WhatsApp chat