இறுதி செமஸ்டர் தேர்வு எழுதும் அண்ணா பல்கலைக்கழக மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!!

0
86

அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இறுதி செமஸ்டர் தேர்வுக்கான கால அட்டவணையை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.

அண்ணா பல்கலைகழகத்தின் பொறியியல் படிப்புகளுக்கான இறுதி ஆண்டு பருவத்தேர்வு வரும் செப்டம்பர் 24ம் தேதி முதல் 29ம் தேதி வரை ஆன்லைன் மூலம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வுகள் அனைத்தும் காலை 10 மணி முதல் 11 மணி, 12 மணி முதல் 1 மணி, 2 மணி முதல் 3 மணி மற்றும் 4 மணி முதல் 5 மணி வரை என நான்கு வேளைகளாக ஒரு மணி நேரம் மட்டும் நடத்தப்படும்.

இந்த தேர்வுகளில் கேட்கப்படும் 40 கேள்விகளில் மாணவர்கள் 30 கேள்விகளுக்கு பதில் அளித்தால் போதுமானது. இந்த கேள்விகள் அனைத்தும் பல விடைகளில் ஒன்றை தேர்வு செய்யும் வகையில் கேட்கப்பட்டிருக்கும். மேலும், பாடப்பிரிவுகளில் ஏதேனும் 4 தலைப்புகளை படித்தால் போதுமானது என்று அண்ணா பல்கலைகழகம் தெரிவித்துள்ளது.

இறுதி பருவத் தேர்வுகளுக்கு முன் மாணவர்களுக்கான மாதிரி ஆன்லைன் தேர்வுகள் செப்டம்பர் 19 மற்றும் 21ம் தேதி நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் தேர்வு எழுதும் இறுதியாண்டு மாணவர்களுக்கு இறுதி செமஸ்டர் தேர்வுக்கான கால அட்டவணையை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. இதில் எந்தெந்த தேர்வுகள் எந்தெந்த நேரத்தில் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
Parthipan K