டிக் டாக் செயலியும், அதிகரிக்கும் குற்றங்களும்; அன்றே எச்சரித்த ராமதாஸ்!

0
80

டிக் டாக் செயலியும், அதிகரிக்கும் குற்றங்களும்; “அன்றே எச்சரித்த ராமதாஸ்!

சம்பவம் 1 : தூத்துக்குடி மாவட்டத்தில் ஆயுதப்படை போலீசார் வளாகத்தின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காவல்துறை வாகனத்தின் மீது ஏறி 3 இளைஞர்கள் டிக் டாக்கில் சினிமா பாடலுக்கு ஏற்றவாறு வீடியோ எடுத்தனர். இந்த விசயம் காவல்துறைக்கு தெரியவர மூன்று இளைஞர்களையும் அழைத்து எச்சரித்தது மட்டுமில்லாமல்,

தூத்துக்குடி மார்க்கெட் சிக்னலில் 8 மணி நேரம் போக்குவரத்தை சரி செய்யும் வேலையை தண்டனையாக கொடுத்தார்கள்.
இளைஞர்களை நல்வழிப்படுத்தும் நோக்கத்திலும் காவல்துறை பணியின் சிரமத்தை உணர வேண்டும் என்பதற்காகவும் இந்த தண்டனை கொடுத்ததாக காவல்துறை தரப்பில் கூறப்பட்டது.

சம்பவம் 2 : சென்னை அம்பத்தூரை சேர்ந்த தயாநிதி என்பவர் போதை பொருட்களும், கொலை செய்யும் ஆயுதங்களையும் டிக் டாக் வீடியோவில் பதிவிட்டதால் சமூக அமைதிக்கு ஊறுவிக்கும் வகையிலும், கஞ்சா போன்ற சட்டவிரோத செயல்களுக்காகவும் கைது செய்யப்பட்டார்.

சம்பவம் 3 : நெல்லை மாவட்டம் தாழையூத்து அருகே குறிஞ்சிக்குளம் கிராமத்தில் மாயாண்டி என்பவரின் சொல்போன் உதவியில் தொடர்ந்து டிக் டாக் வீடியோவை பதிவிட்ட 9 வயது சிறுவன் கொம்பையா அதே  மாயாண்டியால் ஓரினச் சேர்க்கைக்காக முட்புதரில் கொல்லப்பட்டான்.

சம்பவம் 4 : தனது கணவன் சிங்கப்பூரில் இருந்த காரணத்தால் தனிமையை தவிர்க்க நினைத்த வினிதா என்கிற பெண்மணி அபி என்பவருடன் டிக் டாக்கில் நெருங்கி பழகியதால் நாளைடைவில் வினிதாவும்,அபியும் 25 சவரன் நகைகளுடன் வீட்டை விட்டு ஓடிப்போன சம்பவம் குடும்பத்தில் பிரச்சினையாகி அந்த குடும்பமே நிம்மதியற்று போனது.

சம்பவம் 5 : கேரளா அருகே டிக் டாக் மூலமாக தொடர்பாகி ஜோடியாக ஆடிப்பாடி வந்த காதலர்களின் திருமணத்திற்கு பெண் வீட்டார் ஏற்கமறுத்த காரணத்தால் காதலி ஆஷிகா தனது காதலனால் கொல்லப்பட்டார்.

சம்பவம் 6 : கிருஷ்ணகிரி பாரதியார் நகரைச் சேர்ந்த ரேவதி என்கிற பெண்மணி பொழுதுபோக்கிற்காக டிக் டாக் பயன்படுத்த ஆரம்பித்தார். இவருடன் டிக் டாக்கில் ஈரோட்டை சேர்ந்த மோகன்குமார் என்பவர் நெருங்கி பழக ஆரம்பித்தார், ஒரு கட்டத்தில் மோகன்குமார் பாலியல் தொல்லை கொடுத்தது அல்லாமல் ரேவதியின் வீட்டிற்கே நேரில் வந்து பெரும் பிரச்சினை ஆனது.

கலை, நடனம் மற்றும் பொழுதுபோக்கிற்காக உண்டாக்கப்பட்டதே இந்த டிக் டாக் செயலி. இந்த செயலியினால் சமூகத்தில் பல்வேறு கொலைகளும், குற்றங்களும் தொடர்ந்து
நடந்து வருவதாலும், பல்வேறு பெண்களும் குடும்பங்களும் பாதிக்கப்படுவதை தவிர்க்க இந்த டிக் டாக் செயலியை தடைசெய்ய வேண்டும் என்று கடந்த வருடம் ஜனவரி 2 ஆம் தேதி பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் எச்சரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
Jayachandiran