முக்கிய நபரின் வேட்புமனு நிறுத்திவைப்பு! அப்செட்டில் எல். முருகன்!

0
63

தமிழக சட்டசபை தேர்தல்வரும் ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி நடைபெற இருப்பதால் கடந்த 12ஆம் தேதி அதற்கான வேட்புமனுத்தாக்கல் தொடங்கியது. இந்த நிலையில், நேற்று மாலை 3 மணியுடன் வேட்புமனு தாக்கல் நிறைவடைந்தது.சட்டசபை தேர்தலில் போட்டியிட தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்களை தேர்தல் அதிகாரிகள் இன்று காலை முதலே தீவிரமாக பரிசீலனை செய்து வருகிறார்கள்.

இதில் தமிழகத்தின் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் திமுகவின் தலைவர் ஸ்டாலின் துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் பாஜகவின் மாநில தலைவர் எல்.முருகன், அதேபோல மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் நடிகர் கமலஹாசன், போன்ற மிக முக்கிய தலைவர்களின் வேட்புமனுக்கள் அனைத்தும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

இந்த சூழ்நிலையில், பாஜகவின் சார்பாக சென்னை துறைமுகம் தொகுதியில் போட்டியிடும் வினோஜ் பி செல்வம் அவர்களின் வேட்புமனு தற்சமயம் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது.வாக்காளர் அடையாள அட்டையில் இருக்கின்ற பெயரும் வேட்புமனு தாக்கலில் இருக்கின்ற பெயரும் வெவ்வேறு பெயராக இருப்பதால் வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

அதேபோல இதே தொகுதியில் இரண்டு பெயரில் வேட்பாளர் இருப்பதன் காரணமாகவும் இந்த வேட்பாளர் வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்திருக்கிறது.இதனால் அதிமுகவும் அதன் கூட்டணிக் கட்சியான பாஜகவும் மிகப்பெரிய அதிர்ச்சி அடைந்திருப்பதாக சொல்கிறார்கள்.