ஒரே பிரசவத்தில் பிறந்த ஐந்து போரில் மூவருக்கு ஒரே நாளில் திருமணம் !!

0
53

கேரள மாநிலத்தை சேர்ந்த பிரேம்குமார் மற்றும் ராம தேவி தம்பதியர்களுக்கு , கடந்த 1995- ஆம் ஆண்டு ஒரே பிரசவத்தில் ஒரு ஆண் குழந்தையும், நான்கு பெண் குழந்தைகளும் பிறந்தது. இவர்களின் பெண் குழந்தைகளுக்கு உத்ரஜா, உதரா, உதாரா மற்றும் உத்தமா என்றும்,ஒரு மகனுக்கு உத்ராஜன் என்றும் பெயர் வைத்தனர்.

இவர்களுக்கு 9 வயது ஆன நிலையில் இவரது தந்தை பிரேம்குமார் மரணம் அடைந்தார்.பின்னர் இவர்களின் தாயார் கடின உழைப்பால் இவர்கள் ஐந்து பேரையும் வளர்த்து வந்தனர்.

தற்போது இவர்களில் இரண்டு பேர் மயக்க மருந்து தொழில்நுட்ப வல்லுநராகவும் ஒரு பெண் ஆடை வடிவமைப்பாளர் ஆகும் ஒருவர் ஆன்லைன் எழுத்தாளராகவும் பணிபுரிந்து வருகிறார் வருகின்றனர்.

இவர்களின் தாயார் நான்கு பெண்களுக்கும், ஒரே நேரத்தில் திருமணம் நடத்தி வைக்க முடிவு செய்தனர் . ஆனால், கொரோனா முடக்கம் காரணமாக திருமண நிகழ்வு தள்ளிப்போனது . இந்நிலையில் மூன்று பெண்களுக்கு திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.

ஆன்லைன் எழுத்தாளராக பணிபுரிந்து வரும் உத்தரா என்பவருக்கு வீடியோ பத்திரிக்கையாளர் கேபி மகேஷ்குமாருடனும்,ஆடை அமைப்பாளரான உத்ரா என்பவருக்கு மஸ்கட்டில் ஹோட்டல் மேலாளராக பணிபுரிந்து வரும் அஜித்குமார் என்பவருடனும், மயக்கவியல் தொழில்நுட்ப வல்லுனரான உத்தமா என்பவருக்கு மஸ்கட்டில் கணக்காளராக பணிபுரிந்து வரும் வினித் என்பவருடன், திருமணம் நடத்தி வைத்தனர்.

நான்காவது மகளான உத்ரஜா கொரோனா காரணமாக வெளிநாட்டிலேயே சிக்கி உள்ளதால், அவரது திருமணம் நடத்தப்படவில்லை. அவர் நாடு திரும்பியதும் அவரது திருமணமும் நடைபெறும் என்று அவரது பெற்றோர்கள் தெரிவித்தனர்.

author avatar
Parthipan K