ஆயிரக்கணக்கில் பெண்கள் சிறுமிகள் மாயம்! விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்!

0
93

ஆயிரக்கணக்கில் பெண்கள் சிறுமிகள் மாயம்! விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்!  

கடந்த ஆண்டு மராட்டிய மாநிலத்தில் இருந்து ஆயிரக்கணக்கில் பெண்கள் மற்றும் சிறுமிகள் காணாமல் போனதாக அதிர்ச்சிகரமான தகவல் வெளிவந்துள்ளது.

நாடு முழுவதிலும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் சென்ற ஆண்டு 1100 பெண்கள் சிறுமிகள் காணாமல் போய் உள்ளதாக வெளிவந்த செய்தி அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது. மராட்டிய மாநிலத்தில் மும்பையை அடுத்த பந்தூப் பகுதியைச் சார்ந்த 17 வயது சிறுமியை காணவில்லை என அவரது பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

போலீசார் தேர்தல் வேட்டை நடத்தி சிறுமியை அவுரங்கபாத் என்ற இடத்தில் மீட்டனர். இதில் கடத்தல் காரர்கள் சிறுமியை பாவாராம் மாலி என்பவரிடம் விற்றுள்ளனர்.  ராஜஸ்தானின் ஜலோர் பகுதியைச் சார்ந்த 50 வயதான அவர் 17 வயது சிறுமியை திருமணம் செய்வதற்காக விலைபேசி வாங்கியுள்ளார் என்ற அதிர்ச்சியான செய்தி தெரிய வந்துள்ளது. இதைப்பற்றி மேலும் விசாரணை செய்ததில் மேலும் பல சிறுமிகளை கடத்தி ராஜஸ்தான் மாநிலத்தில் விற்று அங்கு அவர்களுக்கு கட்டாயத் திருமணம் செய்வது வழக்கமாக இருந்துள்ளது.

ராஜஸ்தான், ஹரியானா மற்றும் குஜராத்தில் ஆண் பாலினத்தை விட பெண் மிகவும் குறைவான விகிதத்தில் உள்ளது. ஆண்கள் எண்ணிக்கையுடன் ஒப்பிடும் பொழுது பெண்கள் குறைவான எண்ணிக்கையிலே இந்த மாநிலங்களில் உள்ளனர். இதனால் திருமணம் செய்வதற்காக மராட்டிய மாநிலங்களில் இருந்து பெண்களை அவர்கள் கடத்திச் செல்கின்றனர். கடந்த 2022 ஆம் ஆண்டில் மட்டும் 1164 சிறுமிகளை காணவில்லை என புகார் வந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதில் 1047 வழக்குகளை போலீசார் விசாரணை செய்துள்ளனர்.

2021 ஆம் ஆண்டில் 1103 கடத்தல் வழக்குகளில் 949 வழக்குகளும், 2020 ஆம் ஆண்டில் 779 கடத்தல் வழக்குகளில்,  678 வழக்குகள் விசாரணை செய்யப்பட்டுள்ளன. இதைப் பற்றி போலீஸ் அதிகாரி கூறுகையில் வறுமையை காரணம் காட்டி பணம் தருவதாகவோ அல்லது கடத்திய சென்று இவர்களை ஒன்று அல்லது இரண்டு லட்சத்திற்கு விற்று விடுகின்றனர்.

தேசிய குற்ற ஆவண பதிவுகள் வாரியம் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கை ஒன்றின்படி, 2020 மற்றும் 2022 ஆகிய ஆண்டுகளுக்கு இடையே மும்பையில் பெண் குழந்தைகள் கடத்தல் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என அதிர்ச்சிகரமான தகவலை வெளியிட்டுள்ளது.  திருமணத்திற்காக கடத்தப்பட்ட 418 பெண்களில் 363 பேர் சிறுமிகள் என்பது தெரிய வந்துள்ளது. இந்த கடத்தலுக்கு அடிப்படை காரணமாக ராஜஸ்தான் குஜராத் மற்றும் அரியானா மாநிலத்தில் பெண் பாலின விகிதம் குறைவாக இருப்பது தான். பணக்கார மாநிலங்களில் ஏழ்மையான மாநிலங்களை விட பெண் பாலின விகிதம் குறைவாக உள்ளது.

இந்தியாவின் வடக்கு மற்றும் மேற்கு உள்ள டாப் 10 பணக்கார மாநிலங்களான ஹரியானா, குஜராத்,  உத்தரகாண்ட் ஆகியவற்றில் பெண் பாலின விகிதம் குறைவாக உள்ளது. ஆயிரம் சிறுவர்களுக்கு சிறுமிகளின் எண்ணிக்கையானது 7 இந்திய மாநிலங்களின் சராசரியை விட குறைவாக உள்ளது. பணக்கார  மற்றும் கல்வியறிவு பெற்றமாநிலங்களில் குறைவான எண்ணிக்கையில் பெண் குழந்தைகள் பிறந்துள்ளனர்.

கல்வி அறிவு பெற்றவர்கள் வருவாய் அதிகரிப்பதால் எளிதில் பாலினங்களை தேர்வு செய்யும் நடைமுறைகளை அணுகி அதன் பலனை எளிதில் பெற்று விடுகின்றனர். இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் ஆயிரம் சிறுவர்களுக்கு இணையான சிறுமிகளின் எண்ணிக்கை நிறைய மாநிலங்களில் 900 கீழே சென்றுள்ளதாக 2018- ஆம் ஆண்டின் நிதி அயோக் அறிக்கை அதிர்ச்சியான தகவலை வெளியிட்டுள்ளது.