தொட்டியம் அருள்மிகு மதுரை காளியம்மன் திருக்கோவில்!

0
371

மூலவர்: மதுரை காளியம்மன்
தீர்த்தம்: காவிரி

தலச்சிறப்பு:

இந்த தளத்தில் வருடந்தோறும் ஆனி திருமஞ்சன விழா மிகவும் விமர்சையாக நடைபெறும் திருமண விழாவின் போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் தொட்டியம் காவிரி நதியிலிருந்து பால்குடம், தீர்த்தக்குளம், சந்தன குடம், அக்னிசட்டி உள்ளிட்டவற்றை எடுத்து அலகு குத்தி மதுரை காளியம்மனுக்கு தங்களுடைய வேண்டுதலை நிறைவேற்றுவார்கள்.

இந்தக் கோவில் பங்குனி தேர் திருவிழா, காப்பு கட்டுதல் மற்றும் பூப்புரிதல் ஆரம்பமாகும். ஒவ்வொரு வருடமும் பங்குனி மாதம் திருவிழாவை முன்னிட்டு அம்மன் கோவில் ஒருவாரம் அடக்கப்பட்டிருக்கும்.

அப்படி அடைக்கப்படும் அம்மன் கருவறையில் 2 பெரிய பானைகளில் நெய் ஊற்றி 8 வேட்டியில் 2 பெரிய திரிகள் தயாரிக்கப்பட்டு விளக்குகள் ஏற்றப்படும். இதனை தொடர்ந்து அடைத்த கோவிலுக்கு ஆயிரம் பானைகளில் பொங்கல் வைத்து மதுரகாளி அம்மன் கோவில் முன்பு பூஜை செய்து வழிபாடு செய்யப்படும்.

முக்கிய நிகழ்வான சுமார் 30 அடி உயரமுள்ள ஓலை பிடாரி அம்மன் சுமார் 29 அடி உயரமான தேர் மதுரகாளியம்மன் திருத்தேர் தலை அலங்காரமும் அதன்பிறகு 2 தேர் தூக்கும் நிகழ்ச்சி மூலமாக அம்மன் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றார் என்று சொல்லப்படுகிறது.

தலவரலாறு:

இந்த தலத்தை 400 வருடங்களுக்கு முன்னர் இப்பகுதியை ஆட்சி செய்த பாளையக்காரர் கஜனன நாயக்கர் காட்டியிருக்கிறார் மதுரை மாநகரில் வீற்றிருந்த மகாகாளியம்மன் தொட்டியத்திலிருந்து பறையிசைக்க சென்ற இருவரின் இசையில் மயங்கி தொட்டியம் செங்கம்புதரில் வந்தமர்ந்தாள் என்று சொல்லப்படுகிறது.

அப்போது எஸ் அங்கராயன் பட்டியிலிருந்த மாடுகள் மேய்ந்து விட்டு பால் கொடுக்கும் சமயத்தில் செங்கம்புதர் சென்று அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்து வந்தனர். இதனை அறிந்து கொள்ளாத ஊர் பொதுமக்கள் மாட்டில் பால் கறந்தால் பால் வருவதில்லை ஆகவே செங்கம்புதரில் யாரோ பாலை கறந்து விடுகிறார்கள் என்று அரசனிடம் முறையிட்ட தாக தெரிகிறது.

ஆகவே அரசன் தன்னுடைய படைவீரர்களுடன் சங்கம் புதர் சென்று கள்வன் யாரென்று தேடினார் அரசன் வாளை புதருக்குள் சொருகினான் சற்று நேரத்தில் புதரிலிருந்து ரத்தம் பீறிட்டு வெளிவந்தது.

உடனடியாக மன்னன் அதிர்ந்து போனான் அவன் முன்பு ஸ்ரீ மதுரகாளியம்மன் தோன்றினாள் இன்றும் கருவறையிலிருக்கின்ற மதுரகாளியம்மன் மேனியில் இந்த காயத்தின் வடுவுமிருக்கிறது என சொல்லப்படுகிறது .மனமுருகி மன்னிக்கும்படி வேண்டி தாயே உனக்கு என்ன வேண்டும்? ஏன் இப்படி அமர்ந்திருக்கிறாய் என்று மன்னன் கேள்வி எழுப்பினார்.

மதுரை காளியம்மன் அரசனுடைய பட்டியிலிருந்து ஒரு மாட்டை காண்பித்து இந்த மாடு எங்கெல்லாம் சென்று சுற்றி வருகிறதோ அதெல்லாம் எனக்கு சொந்தம். அதுவே என்னுடைய எல்லை என மதுரகாளியம்மன் தெரிவித்தார்.

மாடு 18 பட்டி கிராமம் சுற்றிவந்து புதரில் நின்றது 18 பட்டி மக்களும் என்னுடைய குழந்தைகள் என் அருள் பெற ஒரு அழகான கோவிலை அமைத்து என்னை வழிபட வகை செய்வாயாக என்று தெரிவித்து ஸ்ரீ மதுரகாளியம்மன் மறைந்தார். அம்மனின் வாக்கை கனிவுடன் ஏற்றுக்கொண்ட அரசன் உடனடியாக தொட்டியம் ஸ்ரீ மதுரகாளியம்மன் திருக்கோவிலை தட்டினார் என்று சொல்லப்படுகிறது.

நடைத்திறப்பு:
காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை மாலை 2 மணி முதல் இரவு 9 மணி வரை

கோவில் முகவரி:

அருள்மிகு மதுரகாளியம்மன் திருக்கோயில் தொட்டியம் திருச்சி மாவட்டம்