முகக் கவசம் அணியாதவர்களுக்கு இனி அபராதம்:! தமிழக முதல்வர் அதிரடி உத்தரவு!

0
65

முகக் கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும்:! தமிழக முதல்வர் அதிரடி உத்தரவு!

தமிழகத்தில் கடந்த மார்ச் மாதத்திலிருந்து தற்போது வரை எட்டு கட்டங்களாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.கடந்த ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை ஏழாம்கட்ட ஊரடங்கு நிறைவு பெற்ற நிலையில்,செப்டம்பர் 1-ஆம் தேதியிலிருந்து செப்டம்பர் 30-ஆம் தேதி வரை எட்டாம்கட்ட ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
மக்களின் பொருளாதாரத்தை கருத்தில் கொண்டு எட்டாம் கட்ட ஊரடங்கில் தமிழக முதல்வரால்,பொது போக்குவரத்து இயக்கம்,வழிபாட்டு தளங்கள் திறப்பு,மால்கள் திறப்பு,போன்ற பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது.
இதுமட்டுமின்றி 5 மாதங்களுக்கு பிறகு நேற்று அனைத்து போக்குவரத்துகளும், ரயில் சேவைகளும் இயக்கப்பட்டன.

இதனால் மென்மேலும் நோய் பரவும் அபாயம் அதிகம் உள்ளதால், இன்று காலை 10 மணிக்கு தலைமை செயலகத்தில் மருத்துவ நிபுணர் குழுவுடன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ஆலோசனை நடத்தினார்.ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு தமிழக முதல்வர்,செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.அப்பொழுது பழனிச்சாமி அவர்கள் கூறியவாறு:

தமிழகத்தில் நாள் ஒன்றுக்கு 85,000 கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன என்றும்,மேலும்
அதிகளவில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள தமிழகம் முழுவதும் 2,000 மினி கிளினிக் ஏற்படுத்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இதுமட்டுமின்றி,40% மக்கள் முக கவசம் அணியாமல்,அலட்சியம் காட்டுவதாக சுட்டிக்காட்டிய முதல்வர் இனி முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.

 

author avatar
Pavithra