யாருக்கெல்லாம் நகைக்கடன் தள்ளுபடி கிடையாது?

0
65
Those who are not eligible for jewel loan reduce

தமிழகத்தில், செப்டம்பர் 13-ம் தேதி, 110 விதியின் கீழ் நகைக்கடன் தள்ளுபடி தொடர்பான அறிவிப்பினை சட்டமன்றத்தில் வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். மேலும், நகைக் கடன் தள்ளுபடி என்பது ஒரு குடும்பத்திற்கு 5 சவரனுக்கு உட்பட்ட நகைக் கடன்களை சில தகுதிகளின் கீழ், உண்மையான ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில், தள்ளுபடி செய்யப்படும் என்றும் கூறினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

முதலமைச்சர் அறிவிப்பு செப்டம்பர் 13-ம் தேதி வெளியிடப்பட்டதை தொடர்ந்து நகைக்கடன்களஉ எப்போது தள்ளுபடி செய்யப்படும் என்ற நிலையில், 5 சவரனுக்குட்பட்ட நகைக்கடன் தள்ளுபடி தொடர்பான அரசாணையை தமிழக அரசு நேற்று (நவம்பர்-1) வெளியிட்டுள்ளது.

மேலும், 5 சவரனுக்கு உட்பட்ட நகைக் கடன்களைத் தள்ளுபடி செய்வதற்காக அரசுக்கு ஏற்படும் செலவுகள், மதிப்பீடுகள் மற்றும் ஆய்வுகளின் அடிப்படையில், இதற்காக 6 ஆயிரம் கோடி ரூபாய் வரையிலாகும் எனத் தெரிய வருகிறது.

கூட்டுறவு சங்கங்களின் மூலம் வழங்கப்படும் நகைக்கடன்கள் அனைத்தும், கூட்டுறவு சங்கத்தின் சொந்த நிதியிலிருந்து, அதாவது பொதுமக்களின் வைப்புத் தொகையிலிருந்து வழங்கப்பட்டுள்ளது. ஆகவே, கூட்டுறவு நிறுவனங்களுக்குத் தள்ளுபடி தொகையினை அரசே வழங்கும்” என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் அரசு ஊழியர்கள், ஓய்வூதியம் பெறுபவர்கள் மற்றும் ஆதார் கார்டு அடிப்படையில் ஒன்றுக்கு மேற்பட்ட வங்கிகளில் நகை கடன் (5 சவரனுக்கு மேல்) பெற்றுள்ள நபர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர்கள் ஆகியோருக்கும், எந்தப் பொருளும் வேண்டாத குடும்ப அட்டைதாரர்களுக்கும் நகை கடன் தள்ளுபடி கிடையாது என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது

author avatar
Parthipan K