தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம்! எதிர்க்கட்சித் தலைவர் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படுமா? அமைச்சர் ரகுபதி பரபரப்பு தகவல்!

0
86

புதுக்கோட்டை பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்த தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி ஆறுமுகசாமி ஆணையம் தாக்கல் செய்யப்பட்டுள்ள அறிக்கையின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மூலமாக யார் யார் மீது என்னென்ன குற்றச்சாட்டுகளை இந்த ஆணையம் முன் வைத்திருக்கிறதோ அவர்களிடம் விளக்கம் கேட்டு அதன் பிறகு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளார்.

இந்த ஆணையத்தை அரசியலுக்காக பயன்படுத்தவில்லை. இது முழுக்க, முழுக்க முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறப்பில் என்ன நடந்தது. என்பதை வெளிக்கொண்டு வருவதற்காக அமைக்கப்பட்ட ஒரு ஆணையம் ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த பொழுது யாரிடம் கட்டுப்பாடுகள் அனைத்தும் இருந்தது என்று அந்த ஆணையும் முழுமையாக தெரிவித்துள்ளது.

ஜெயலலிதா சிகிச்சை பெற்ற போது மருத்துவமனையில் அரை எடுத்து தங்கி இருந்த குடும்பத்தைச் சார்ந்த டிடிவி தினகரன் இந்த அறிக்கையை வரவேற்க மாட்டார் என்று அமைச்சர் ரகுபதி விமர்சனம் செய்துள்ளார்.

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு குறித்து அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கையின்படி முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மீது வழக்கு பதிவு செய்வது தொடர்பாக உள்துறை முடிவு செய்யும் ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை படி அப்போதைய தமிழக சுகாதாரத்துறை அமைச்சரிடம் பொறுப்பு முதல்வராக இருந்த பன்னீர்செல்வம் ஜெயலலிதாவை மருத்துவத்திற்காக வெளிநாட்டிற்கு அழைத்துச் செல்ல தெரிவித்ததாக ஆணையம் கூறியுள்ளது. அதன் பிறகு எப்படி பன்னீர்செல்வத்தை குற்றம் சுமத்த முடியும் என்று தெரிவித்துள்ளார் அமைச்சர் ரகுபதி.