அட என்னம்மா சொல்ற நீ? அமைச்சர் கீதா ஜீவனால் அதிர்ந்துபோன எதிர்க்கட்சியினர்!

0
68

தமிழ்நாடு முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறவிருக்கின்ற சூழ்நிலையில் கடந்த 28ம் தேதி அந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியது. இந்த நிலையில், விறுவிறுப்பாக அரசியல் கட்சிகள் வேட்புமனு தாக்கல் செய்து வந்தார்கள்.

வேட்புமனு தாக்கல் முடிவடைந்த நிலையில், தற்போது தமிழ்நாடு முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான தீவிர பிரச்சாரத்தில் அனைத்து கட்சிகளும் இறங்கியிருக்கிறார்கள். அந்த விதத்தில் 100 சதவீத வெற்றியை பெற வேண்டும் என்ற காரணத்திற்காக, ஆளும் தரப்பான திமுக பரபரப்பான பிரச்சாரத்தில் இறங்கியிருக்கிறது.

அதன் அடிப்படையில் தூத்துக்குடி மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில் உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அதிமுக ஆட்சியில் தூத்துக்குடி மாநகராட்சியில் ஏராளமான திட்டங்களை செயல்படுத்தியிருக்கிறோம். குறிப்பாக 234 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 4வது பைப்லைன் திட்டம் செயல்படுத்தப்பட்டிருக்கிறது என குறிப்பிட்டிருக்கிறார்.

மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 5 பெரிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டிருக்கிறது அறிஞர் அண்ணா திருமண மண்டபம் சிவன் கோவில் திருமண மண்டபம் உள்ளிட்டவை கட்டி கொடுக்கப்பட்டிருக்கிறது. ஓடை பாலம் கட்டிமுடிக்கப்பட்டது என்று பட்டியலிட்டிருக்கிறார் எதிர்க்கட்சித் தலைவர்.

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அதிநவீன கருவிகள் மூலமாக புற்றுநோய்க்கு சிகிச்சை வழங்கும் வசதி செய்யப்பட்டிருக்கிறது. தூத்துக்குடி மாநகராட்சியில் இருக்கின்ற 60 வார்டுகளில் இருக்கின்ற குப்பைகளை அகற்றுவதற்கு 100க்கும் மேற்பட்ட தனியார் வாகனங்கள் மூலமாக முழு சுகாதார வசதி செய்யப்பட்டிருக்கிறது.

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் தூத்துக்குடி மாநகராட்சியில் 1000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பல்வேறு திட்டங்கள் நடைபெற்று வருகிறது என குறிப்பிட்டிருக்கிறார் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி.

மேலும் சிமெண்ட் சாலைகள், தார் சாலைகள், கழிவுநீர் கால்வாய் புறநகர் சாலை, ஒளிரும் மின் விளக்குகள் சாலையின் ஓரத்தில் பொதுமக்கள் நடந்து செல்ல நடைமேடைகள், 20க்கும் மேற்பட்ட பூங்காக்கள் அமைக்கும் பணி நடந்து வருகிறது என்று தெரிவித்திருக்கிறார்.

தூத்துக்குடி மாநகராட்சியில் 1000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சீர்மிகு பணிகள் உள்ளிட்டவற்றை முன்னெடுத்த அரசு அதிமுக அரசு. தமிழ்நாட்டிலேயே அதிக திட்டங்கள் நிறைவேற்றப்பட்ட மாநகராட்சி தூத்துக்குடி மாநகராட்சி என்று தெரிவித்திருக்கிறார் எதிர்க்கட்சித் தலைவர்.