இந்த ராசிக்காரரே வேலை செய்யும் இடத்தில் கவனம் தேவை!! இன்றைய ராசிபலன்!! 

0
215
#image_title

இந்த ராசிக்காரரே வேலை செய்யும் இடத்தில் கவனம் தேவை!! இன்றைய ராசிபலன்!!

மேஷம்:

மேஷம் ராசி அன்பர்களே இன்று நீங்கள் பொறுமையை கடைப்பிடிக்க வேண்டிய நாள். பொறுமையுடன் இருக்கும் பட்சத்தில் நீங்கள் எண்ணிய எண்ணங்கள் அனைத்தும் நிறைவேறும். வேலை செய்யும் இடத்தில் உங்கள் பணிகளை திட்டமிட்டு செய்ய வேண்டும். ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை.

ரிஷபம்:

ரிஷபம் ராசி அன்பர்களே இன்று உங்களுக்கு நற்பலன்கள் கிடைக்கும் நன்னாள். வேலை செய்யும் இடத்தில் பல சவால்களைத் தாண்டி நீங்கள் நற்பெயர் பெறுவீர்கள். உங்கள் துணைவியுடன் இனிமையான முறையில் நடந்து கொள்ளும் பட்சத்தில் இல்லற வாழ்க்கை மகிழ்ச்சியாகரமானதாக இருக்கும். தன லாபம் கிட்டும்.

மிதுனம்:

மிதுனம் ராசி அன்பர்களே இன்று நீங்கள் உற்சாகமாக காணப்படுவீர்கள். நீங்கள் தொடங்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும். புதிய வேலை வாய்ப்பு கிடைக்க அதிக வாய்ப்புகள் உள்ளது. இல்லற வாழ்க்கை இன்று மகிழ்ச்சிகரமானதாக காணப்படும். உடல் ஆரோக்கியம் மேம்பட்டு இருக்கும்.

கடகம்:

கடகம் ராசி அன்பர்களே இன்று நீங்கள் நினைத்த காரியம் நிறைவேற சற்று தாமதமாகும். கடவுள் வழிபாடு மூலம் உங்களுக்கு நற்பலன்கள் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் மிகவும் கவனத்துடன் வேலையில் ஈடுபட வேண்டும். பண வரவு சற்று குறைவாக காணப்படும். உங்கள் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை கொள்வது நல்லது.

சிம்மம்:

சிம்மம் ராசி அன்பர்களே இன்று நீங்கள் விரும்புவதை பெறுவதற்கு திட்டமிட்டு செயல்பட வேண்டும். ஆன்மீக ஈடுபாட்டின் மூலம் நீங்கள் நினைத்த காரியம் நிறைவேறும். வேலை செய்யும் இடத்தில் சற்று அனுசரித்து நடப்பது நல்லது. காரணம் இன்றி உங்கள் துணையிடம் சண்டை ஏற்படக்கூடும். செலவு அதிகரிக்கும் நாள்.

கன்னி:

கன்னி ராசி அன்பர்களே நீங்கள் நினைத்த காரியங்கள் அனைத்தும் நிறைவேறும் நன்னாள். இன்று நீங்கள் மிகவும் மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள் வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு பெரும் ஆதரவு பெருகும். இல்லற வாழ்க்கை மகிழ்ச்சிகரமானதாக இருக்கும். பண வரவு கிட்டும் நாள்.

துலாம்:

துலாம் ராசி அன்பர்களே நீங்கள் எண்ணிய எண்ணங்கள் அனைத்தும் கைகூடும் நன்னாள். முக்கிய முடிவுகளை இன்று நீங்கள் எடுப்பதன் மூலம் வெற்றி காண்பீர்கள். பணிபுரியும் இடத்தில் இன்று அனைத்து காரியங்களும் உங்களுக்கு சாதகமாக அமையும். லாபம் அதிகரிக்கும் நாள்.

விருச்சகம்:

விருச்சகம் ராசி அன்பர்களே இன்று நீங்கள் அதிக அளவு நன்மைகளைப் பெற உங்கள் உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி பொறுமையுடன் இருக்க வேண்டும். வேலை செய்யும் இடத்தில் மிகுந்த கவனம் தேவை. உங்கள் துணையிடம் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் உண்டாகலாம். வரவுக்கேற்ப செலவும் காணப்படும்.

தனுசு:

தனுசு ராசி அன்பர்களே நீங்கள் நினைக்கும் குறிக்கோளை அடையும் நல்ல நாள். உங்கள் திறமைகள் இன்று வெளிப்படும். வேலை செய்யும் இடத்தில் பணி தொடர்பாக வெளியூர் செல்ல நேரிடும். இன்று நீங்கள் உங்கள் துணையுடன் மகிழ்ச்சிகரமாக இருப்பீர்கள். பண உதவிகள் கிட்டும் நன்னாள்.

மகரம்:

மகரம் ராசி அன்பர்களே இன்று நீங்கள் நினைத்த காரியங்கள் நிறைவேறும் நன்னாள். வேலை செய்யும் இடத்தில் சக பணியாளர்கள் உங்களுக்கு உதவிகரமாக இருப்பார்கள். உங்கள் இல்லற வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சிகரமானதாக காணப்படும். தனவரவு கிட்டும்.

கும்பம்:

கும்பம் ராசி அன்பர்களே இன்று நீங்கள் முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்ப்பது நல்லது, மேற்கொண்டு எடுக்கும் பட்சத்தில் திட்டமிட்டு செயல்பட வேண்டும். வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு பணி சுமை சற்று அதிகமாக இருக்கும். உங்கள் துணையிடம் தேவையின்றி கருத்து வேறுபாடு உண்டாகலாம். உங்கள் ஆரோக்கியம் மேம்பட்டு காணப்பட உணவு முறையில் கவனம் தேவை.

மீனம்:

மீனம் ராசி அன்பர்களே இன்று நீங்கள் குடும்பத்தில் ஏற்படும் கருத்து வேறுபாடு காரணமாக சற்று மன அமைதி இன்றி காணப்படுவீர்கள். இன்று நீங்கள் முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்கலாம். வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு ஏற்றார் போல் ஆதாயம் கிடைக்காது. உங்கள் அடிப்படைத் தேவைக்கே பணம் பற்றாக்குறையாக காணப்படும்.