இந்த விடுமுறை நாட்களில் பள்ளி மாணவர்களுக்கு இந்த வகை உணவு பொருட்களை வழங்க வேண்டும்! தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு!!

0
71

இந்த விடுமுறை நாட்களில் பள்ளி மாணவர்களுக்கு இந்த வகை உணவு பொருட்களை வழங்க வேண்டும்! தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு!!

கொரோனா பரவல் அச்சத்தின் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடியே இருந்த நிலையில் கொரோனா தொற்று சற்று குறைந்ததன் காரணமாக தமிழகத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 1-ந் தேதி முதல் சில கட்டுப்பாடுகளுடன் 9, 10, 11 மற்றும் 12 ம் வகுப்புகளும் மற்றும் கல்லூரிகளும் திறக்கப்பட்டு பாடங்கள் நடத்தப்பட்டு வந்தன.

அதனை தொடர்ந்து கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 1-ந் தேதி முதல் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு சில கட்டுப்பாடுகளுடன் சுழற்சி முறையில் வகுப்புகள் நடைபெற்று வந்தன. இந்த சூழலில் நாட்டில் கொரோனா மற்றும் ஒமிக்ரான் தொற்று பாதிப்பு அதிகரிக்க தொடங்கியது.

இந்த நிலையில் தொற்று பரவலைக் கட்டுப்படுத்த தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்று கிழமைகளில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டு அமல்படுத்தப்பட்டது. அந்த வகையில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் நலன் கருதி இந்த மாதம் இறுதி வரை ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலும் மற்றும் கல்லூரிகளுக்கும் விடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இருப்பினும், பொதுத்தேர்வு எழுத கூடிய மாணவர்களான 10, 11 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு மட்டும் மாணவர்களின் படிப்பை கருதி நேரடி வகுப்பு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் 10, 11 மற்றும் 12 ஆகிய வகுப்புகளுக்கு மட்டும் நேரடி வகுப்புகள் செயல்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் இன்று தமிழக அரசு ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு உலர் பொருட்களான அரிசி மற்றும் பருப்பு உள்ளிட்ட  பொருட்களுடன் ஐந்து முட்டைகளையும் சேர்த்து வழங்க வேண்டும் என  உத்தரவிட்டுள்ளது. இந்த வகை பொருட்களை ஜனவரி மாத‌த்திற்கான வேலை நாட்களை கணக்கிட்டு மாணவர்களுக்கு வழங்க வேண்டும்  என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

author avatar
Parthipan K