இதோ ரயில்களிலும் இந்த சேவை வந்துவிட்டது! வாட்ஸ் அப் எண் இருந்தால் போதும்!

0
168
This service has arrived in trains too! A WhatsApp number is enough!
This service has arrived in trains too! A WhatsApp number is enough!

இதோ ரயில்களிலும் இந்த சேவை வந்துவிட்டது! வாட்ஸ் அப் எண் இருந்தால் போதும்!

ரயில்வே துறை சார்பில் பயணிகளுக்கு எண்ணற்ற சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ரயில்வேயில் உள்ள நிலையில் தற்போது வாட்ஸ் அப் மூலம் உணவு ஆர்டர் செய்யும் வசதியை ரயில்வே துறை பயணிகளுக்கு அறிவித்துள்ளது.உணவு ஆர்டர் செய்வதற்கென ரயில்வேயில் வாட்ஸ் அப் என்னும் வழங்கப்பட்டுள்ளது. அதன் மூலம் ரயில்வே தனது இ கேட்டரிங் சேவையை வாடிக்கையாளர்களுக்கு ஐ ஆர் சிடிசி மூலம் வழங்கி வருகிறது.

பயணிகள் இ கேட்டரிங் சேவை மூலமாக உணவை ஆர்டர் செய்யலாம். இதற்கு பிஸ்னஸ் வாட்ஸ் அப் எண் +91-8750001323 என்ற வாட்ஸ் அப் எண் வழங்கப்பட்டுள்ளது.முதலில் www.ecattering.irctc.co.in என்ற இணைப்பை கிளிக் செய்ய வேண்டும்.அதன் மூலம் இ கேட்டரிங் முன் பதிவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு கேட்டரிங் சேவையை தேர்ந்தெடுக்க பிசினஸ் வாட்ஸ் அப் எண் செய்தி அனுப்பும்.

இதன் மூலம் வாடிக்கையாளர்கள் ஐ ஆர் சி டி சி இ கேட்டரிங் இணையதளம் மூலம் ரயில் நிலையங்களில் கிடைக்கும் உணவுகளில் இருந்து உணவை முன்பதிவு செய்ய முடியும்.வாட்ஸ் அப் தொடர்பு சேவையின் இரண்டாம் கட்டத்தில் வாட்ஸ் அப் எண் வாடிக்கையாளர்களுக்கு இரு வழி தொடர்பு தளமாக மாறும்.இதில் ஏஐ பவர் சாட்போர்ட் பயணிகளின் இ கேட்டரிங் சேவை தொடர்பான அனைத்து வகையான கேள்விகளையும் எடுக்கும் மற்றும் பயணிகளுக்கான உணவையும் முன்பதிவு செய்யும்.

சில ரயில்களில் மட்டும் வாட்ஸ் அப் தொடர்பு முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன் பிறகு வாடிக்கையாளர்களிடம் இருந்து பெறப்படும் கருத்துக்களின் அடிப்படையில் தான் மீதமுள்ள ரயில்களில் இந்த சேவை அறிமுகப்படுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு வாட்ஸ் அப் மூலம் உணவுகளை ஆர்டர் செய்ய ஐ ஆர் சி டி சி செயலியை பதிவிறக்கம் செய்ய அவசியம் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
Parthipan K