ஆண்களே இது உங்களுக்கான பதிவு! அதை அதிகரிக்க இதை செய்தால் போதும்!

0
89

விந்தனுக்கள் குறைபாடு என்பதை இன்றைய காலகட்டத்தில் பழக்கவழக்கங்கள் மாறுவதால் அதாவது லைஃப்ஸ்டைல் மாறுவதால் ஏற்படுகின்றது. இப்பொழுது இருக்கின்ற காலகட்டத்தில் திருமணம் என்பது தாமதமாக ஏற்பட்டாலும் ஆண்களுக்கு 95 வயது வரை விந்தனுக்கள் உற்பத்தி செய்யத் தகுதியானவர்கள் இருக்கிறார்கள்.. ஆனால் இந்த காலத்தில் 25, 30 வயதிலேயே ஆண்களுக்கு விந்தணுக்கள் குறைபாடு ஏற்படுகின்றது.

இளம் வயதிலேயே விந்தணுக்கள் குறைபாடு மற்றும் முற்றிலுமாக விந்தணுக்கள் உற்பத்தி செய்ய முடியாமல் போவதற்கு காரணம் உடல் சூடு. உடல் அதிகமாக வெப்பம் அடைவதால் உடம்பில் உற்பத்தியாகும் விந்து அணுக்கள் உற்பத்தி ஆகாமல் போய்விடுகிறது. உற்பத்தி ஆனாலும் சீக்கிரமாக இறந்து விடுகிறது என்பதால் விந்தனுக்கள் குறைபாடு ஏற்படுகின்றது.

அதேபோல் இளம் வயதில் உள்ள மாணவர்கள் கல்லூரிக்குச் செல்லும் பொழுது அதிகமாக வாகனங்களில் செல்லும் பொழுது உடல் வெப்பம் அதிகரித்து விந்தனு குறைபாடு ஏற்படுகின்றது. அதேபோல் IT வேலையில் உள்ள ஆண்களுக்கு இரவு நேரத்தில் தொடர்ந்து வேலை செய்யும் பொழுது கண்டிப்பாக விந்தணு குறைபாடு ஏற்படுகின்றது.

ஆண்களுக்கான விதைப்பை குளிர்ச்சி தன்மையில் இருக்கும் பொழுதுதான் விந்தணு உற்பத்தி செய்வது அதிகரிக்கப்படுகிறது.அப்படி உருவாகும் விந்தணுக்கள் சீக்கிரம் இறந்துவிடாமல் நல்ல ஆக்டிவாக இருக்கும்.

அதனால் அதிகமான இறுக்கமான உள் ஆடைகளை அணியும் பொழுது விதைப்பைகள் அதிகம் வெப்பம் அடைவதால் விந்தணுக்கள் உற்பத்தியாக முடியாமல் இறந்துவிடுகின்றன. அதேபோல் மொபைல் போன்களை பேண்ட் பாக்கெட்டுகளில் இருபுறமும் வைத்துக்கொள்வது, அதேபோல் லேப்டாப்பை மடியில் வைத்து பயன்படுத்துவது என்பதை போன்று வெப்பம் நேரடியாக விதை பைகளை தாக்கும் பொழுது குறைபாடு ஏற்பட வாய்ப்புள்ளது.

இரவில் கண்விழித்து வேலை பார்ப்பதாலும் உடல் சூடு அதிகமாகி விதைப்பைகள் விந்தணுக்களை உற்பத்தி செய்ய முடியாமல் போய்விடுகின்றது. இதை தடுக்க வாரம் 3 முறையாவது நல்லெண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும். தலைக்கு மட்டும் குளிக்காமல் உடல் முழுவதும் நன்றாக தேய்த்து குளிக்க வேண்டும். உடல் முழுவதும் நல்லெண்ணெய் வைத்து நன்றாக தேய்த்து விட்டு லேசான சூடான தண்ணீரில் குளிக்க வேண்டும். ஆண்கள் அதிகமான சூடான தண்ணீரில் குளிக்க வேண்டாம். நேரடியாக சுடுதண்ணீர் விதை பைகளை தாக்கும் பொழுது குறைபாடு ஏற்படும்.

அதிகமான காபி குடிப்பதனால் விந்தனுக்கள் குறைபாடு ஏற்பட வாய்ப்புள்ளது. அதனால் காபி குடிப்பதை தவிர்க்கலாம். புகை பிடிப்பவர்களுக்கும் விந்தணு குறைபாடு ஏற்படுகின்றது

புகைப்பிடிப்பதால் அதிகமாக விந்தணு குறைபாடுகள் ஏற்படுகின்றன. புகை பிடிப்பதால் நிக்கோட்டின் புகை உடலை பாதித்து விந்தணுக்கள் தலை மற்றும் கால் இல்லாமல் குறைபாட்டுடன் கர்ப்பப்பையில் நுழையும் பொழுது கரு கலைதல் ஏற்படும் மற்றும் குழந்தைகளுக்கு நுரையீரல் பிரச்சனை வரும். குழந்தை ஊனமாக பிறப்பதற்கான பிரச்சினைகள் வரும் என சொல்லபடுகிறது.

ஆனால் திருமணத்திற்கு முன்பே குடிப்பழக்கம் மற்றும் புகைப் பழக்கத்தை விட்டுவிட்டு உடலை குளிர்ச்சி செய்யுமாறு வெண்பூசணி ஜூஸ்,கேரட் ,பீட்ரூட் ஜூஸ் நெல்லிக்காய் ஜூஸ், கரிசலாங்கண்ணி ஆகியவற்றை எடுத்துக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு தொடர்ந்து செய்யும்பொழுது விந்தணுக்கள் அதிகரிக்கப்பட்டால் நல்ல உடல் ஆரோக்கியம் உள்ள குழந்தையும் பிறக்கும்.

author avatar
Kowsalya