அரசு பேருந்துகளில் இன்று முதல் இந்த பார்சல் சேவை தொடக்கம்!.. தமிழக அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!…

0
97

அரசு பேருந்துகளில் இன்று முதல் இந்த பார்சல் சேவை தொடக்கம்!.. தமிழக அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!…

பொதுமக்கள் விவசாயிகள் மற்றும் வணிகர்கள் ஆகியோர் பார்சலை தினசரி வாடகை அல்லது மாத வாடகை மூலமாக அல்லது பேருந்து மூலமாகவே மற்ற ஊர்களுக்கு பொருட்களை அனுப்பி வருகின்றன.ர் இதில் முதற்கட்டமாக ஏழு முக்கிய நகரங்களிலிருந்து பார்சல் சேவை சென்னைக்கு அனுப்பி இருக்கின்றனர். அதாவது மாத வாடகையின் மூலமாகவோ அல்லது தினசரி வாடகை மூலமாகவோ பார்சல்களை அனுப்பலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் திருச்சி, மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி, செங்கோட்டை ,கோயம்புத்தூர், ஓசூர் ஆகிய முக்கிய நகரங்களில் இருந்து சென்னைக்கு பார்சல் சேவை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இவை தனியார் ஆம்னி பஸ் மற்றும் லாரியை காட்டிலும் அரசு பேருந்துகளில் பார்சல் கட்டணம் மிகவும் குறைவு என்பதால் இந்த பார்சல் சேவைகளை பயன்படுத்திக் கொள்ளும்படி அறிவுறுத்தப்படுகின்றனர்.

மேலும் ஒரே நாளில் பார்சல் சென்னைக்கு சென்றடையும் வகையில் இந்த சேவை வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வெள்ளை தூத்துக்குடி போன்ற நகரங்களில் இருந்து சென்னைக்கு 80 கிலோ வரைக்கும் எடை கொண்ட பொருட்களை பார்சல் செய்யலாம். இதற்காக ரூ 390 வரைக்கும் கட்டணம் வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மாத வாடகை அடிப்படையில் பார்சல் அனுப்பும் வியாபாரிகளுக்கு ஒரு மாதத்திற்கான பாஸ் வழங்கப்படும்.

இதன் மூலம் அந்த பஸ்ஸில் எந்தெந்த தேதியில் பார்சல் அனுப்புகிறார்களோ அதனை குறித்து வைத்துக்கொள்ள வேண்டும். அதன் அடிப்படையில் தான் அதற்கான கட்டணம் வசூலிக்கப்படும் என தமிழக அரசு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் மற்றும் விவசாயிகள் நேரம் செலவிடுவதோடு அவர்களின் பணமும் சேமிக்கப்படும். இந்த சேவை நாளையிலிருந்து தொடங்க இருக்கிறது.

author avatar
Parthipan K