Connect with us

Breaking News

இன்று காலை திடீரெனே ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தம்! பயணிகள் கடும் அவதி!

Published

on

This morning, trains suddenly stop! Passengers suffer!

இன்று காலை திடீரெனே ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தம்! பயணிகள் கடும் அவதி!

கடந்த வாரம் முதலில் மழையின் தாக்கம் இருந்து வருகின்றது. அதனால் சென்னையில் சாலைகளில் திரும்பும் பக்கம் எல்லாம் கடுமையான போக்குவரத்து நெரிசல் காணப்பட்டு வருகின்றது. மேலும் சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் காலை மற்றும் மாலை நேரங்களில் கடுமையான போக்குவரத்து நெரிசல் இருக்கின்றது.

Advertisement

அலுவலகம் செல்வோர், பல்வேறு வேலைகளுக்காகவும் செல்வோர்  சரியான நேரத்துக்குள் தாங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு சென்றடைய வேண்டும் என்று நினைத்தாலும் இந்த சாலை நெரிசலினால் சரியான நேரத்திற்கு சென்றடைய முடியாத சூழல் நிலவி வருகிறது. மேலும் இந்த போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்கு சென்னையில் மெட்ரோ ரயில், புறநகர் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றது.

தாம்பரம் முதல் சென்னை கடற்கரை வரை செல்லும் புறநகர் ரயில்கள் மற்றும் சென்னை சென்ட்ரலில் இருந்து அரக்கோணம், திருவள்ளூர் செல்லும் ரயில்களின் தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் பயணம் செய்கின்றனர். காலை மற்றும் மாலை வேலைகளில் ரயில்களின் பயணிகள் கூட்டம் அலைமோதும். பள்ளி கல்லூரிகள் செல்லும் மாணவ மாணவிகள் அலுவலகம் செல்வோர் என அனைத்து தரப்பு மக்களும்   புறநகர் ரயிலை  பெரிதும் பயன்படுத்துகின்றனர்.

Advertisement

இதனால் சில நிமிடங்கள் ரயில் தாமதம் ஏற்பட்டால் கூட பயணிகள் கூட்டம் ரயில் நிலையங்களில் அலைமோதும். இந்நிலையில் இன்று காலை சென்னை சென்ட்ரல் முதல் திருவள்ளூர், அரக்கோணம் மார்க்கத்தில் இயக்கப்பட்ட   ரயில்கள் சிக்னல் கோளாறு காரணமாக ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. மழையின்  காரணமாக இந்த சிக்னல் கோளாறு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்ட்ரலில் இருந்து புறநகர் வழியாக திருவள்ளூர் செல்லக்கூடிய மற்றும் அரக்கோணம் செல்லக்கூடிய ரயில்கள் அனைத்தும் 5  முதல் 1௦  நிமிடம் இடைவெளியில் தாமதமாக இயக்கப்பட்டது. இதனால் மாணவர்கள் பயணிகள்  கடும் அவதி அடைந்தனர். இந்த ரயில்கள் தாமதமானதால் ரயில் நிலையங்களில் கூட்டமும் அதிகரித்தது. சிக்னல் கோளாறு சரி செய்யப்பட்ட பிறகு ரயில்கள் வழக்கம் போல்  இயக்கப்பட்டது. இதனால் பயணிகள் பெரிதும் சிரமத்திற்கு உள்ளாக்கினார்கள்.

Advertisement