சிக்னலில் விதிகளை மீறினால் இனி இப்படித்தான் நடக்கும்! சிக்கலில் மாட்டிக் கொண்ட வாகன ஓட்டிகள்!

0
79

சென்னையில் முக்கிய சாலைகளில் பொருத்தப்பட்ட சிசிடிவி கேமராக்களில் மூலம் சாலை விதிகளை மீறும் நபர்களுக்கு அவர்களது செல்போனுக்கு அபராத சீட்டு வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

 

சென்னையில் அண்ணா நகர் உள்ளிட்ட ஐந்து முக்கியமான பகுதிகளில் சிசிடிவி கேமராக்கள் மூலமாக வாகன விதிமுறைகளை மீறி செல்வோருக்கு உடனடியாக அபராத சீட்டு செல்போனுக்கு வந்து சேரும் புதிய திட்டத்தை துவக்கி வைத்து உள்ளனர்.

 

சிக்னலில் நிற்கும் பொழுது எவ்வளவோ பிரச்சனைகளை கடந்து வந்திருக்கிறோம். சிக்னலை மதிக்காமல் வண்டியில் வேகமாக சென்று விபத்துக்கு உள்ளாகும் நிலைமை கூட ஏற்பட்டுள்ளது. சிக்னல் போடுவதற்குள் பாதி அளவு கோடு தாண்டி சென்று விடுவது போன்ற எக்கச்சக்கமான பிரச்சினைகள் தினமும் வந்து கொண்டு தான் இருக்கிறது. விதியை மீறும் அத்தனை வாகன ஓட்டிகளும் பிடித்து அபராதம் போட முடியாத நிலை போலீசுக்கு ஏற்பட்டுள்ளது அதனால் புதிய தொழில்நுட்பம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.

 

அதாவது சிக்னலில் சாலை விதிகளை மீறும் நபர்களை சிசிடிவி கேமராக்கள் மூலம் பதிவு செய்து வாகன உரிமையாளரின் செல்போனுக்கு அபராத சீட்டு அனுப்பும் முறையை துவங்கி உள்ளது.சென்னையில் உள்ள அண்ணாநகர் உள்ளிட்ட முக்கிய 5 இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு, அதன் மூலம், சிக்னல்களில் சாலை விதிகளை மீறும் வாகன ஓட்டிகளின் செல்போனுக்கு தானியங்கி மூலம் அபராதம் விதிக்கும் முறையை சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிலால் துவங்கி வைத்துள்ளார்.

 

இதனால் சிக்னலில் சாலை விதிகளை மீறி வாகனத்தை ஓட்டும், சாலை விதிகளை மீறும் நபர்களுக்கு அபராதம் விதிக்கப் படுவது ஒரு நல்ல செயல் முறை. மேலும் அனைத்து சிக்னலில் இது போன்ற முறையை பின்பற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

author avatar
Kowsalya