பிரபல நடிகர் செய்யும் காரியமா இது! அடுத்தடுத்து வரும் பாலியல் புகார் பரபரப்பில் திரையுலகினர்!

0
132
this-is-what-a-famous-actor-does-the-film-industry-is-in-a-frenzy-of-sexual-complaints
this-is-what-a-famous-actor-does-the-film-industry-is-in-a-frenzy-of-sexual-complaints

பிரபல நடிகர் செய்யும் காரியமா இது! அடுத்தடுத்து வரும் பாலியல் புகார் பரபரப்பில் திரையுலகினர்!

மலையாள திரையுலகில் பிரபலமான நடிகராக இருப்பவர் கோவிந்தன் குட்டி. இவர் ஆனந்த பத்திரம் என்ற திரைப்படத்தின் மூலமாக மலையாள சினிமாவில் முதன் முதலில் அறிமுகமானார். இந்தப் படத்திற்கு பிறகு பல படங்களில் நடித்துள்ளார். மேலும் கோவிந்தன் குட்டி பல தொலைக்காட்சி தொடர்களை தொகுத்து வழங்குவதோடு, குட்டி எம்டி என்ற யூடியூப்  சேனல் ஒன்றையும் நடத்தி வருகின்றார்.

இந்நிலையில் எர்ணாகுளம் பகுதியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் நடிகர் கோவிந்தன் குட்டி மீது பாலியல் புகார் ஒன்றை கொடுத்துள்ளார். அந்தப் புகாரில் நடிகர் கோவிந்தன் குட்டி தன்னை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பல இடங்களுக்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்தார். இதனை வெளியில் சொன்னால் பலாத்காரம் செய்த வீடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவிடுவேன் என்றும் மிரட்டினார் என கூறியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் கோவிந்தன் குட்டி மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணை போது கோவிந்தன் குட்டிக்கு நீதிமன்றம் முன் ஜாமின் வழங்கி உள்ளது. இவ்வாறு நீதிமன்றம் முன் ஜாமின் வழங்கியதை எதிர்த்து அந்தப் பெண் வழக்கு தொடுத்திருந்தார். இந்தப் பெண்ணை தொடர்ந்து கோவிந்தன் குட்டி மீது மற்றொரு பெண்ணும் பாலியல் புகார் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இரண்டாவதாக வந்த பெண் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள். பிரபலமான நடிகர் கோவிந்தன் குட்டி மீது அடுத்தடுத்து இரண்டு பெண்கள் பாலியல் புகார் கொடுத்தது மலையாள திரை உலகில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

author avatar
Parthipan K