பிரதமர் மோடியின் விருப்பம் இதுதான்! ஓபிஎஸ் செய்தியாளர்களிடம் கூறிய தகவல்

0
105

பிரதமர் மோடியின் விருப்பம் இதுதான்! ஓபிஎஸ் செய்தியாளர்களிடம் கூறிய தகவல்! 

அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்பதே பிரதமர் மோடியின் விருப்பம் என்று ஓ பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்துள்ளார்.

ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் வருகின்ற பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெற இருக்கிறது.  இதில் திமுக -காங்கிரஸ் சார்பில் இபிகே இளங்கோவன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். ஆனால் பாஜக அதிமுக சார்பில் இன்னும் வேட்பாளர்கள் யாரும் அறிவிக்கப்படவில்லை. இபிஎஸ்ஸும் ஓபிஎஸ்-ம் தனித்தனியாக வேட்பாளர்களை அறிவிக்கப் போகிறோம் என்று கூறியதால் இரட்டை இலை சின்னமானது முடக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து ஓபிஎஸ் கூறுகையில் பாஜக வேட்பாளரை நிறுத்தினால் எங்களது முழு ஆதரவையும் பாஜகவிற்கு அளிப்போம் இல்லையெனில் நாங்கள் வேட்பாளரை அறிவிப்போம் என்று  கூறியிருந்தார். இந்நிலையில் இடைத்தேர்தல் குறித்து ஆலோசனை நடத்த புதிய நீதி கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகத்தை ஓபிஎஸ் சந்தித்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பன்னீர்செல்வம் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பாஜக போட்டியிட்டால் அதற்கு முழு ஆதரவையும் அளிப்போம் என்ற நிலைப்பாட்டோடு சண்முகத்தை சந்தித்து தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தியுள்ளோம். எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகிய இருவரும் அதிமுகவை ஒரு வலுவான இயக்கமாக உருவாக்கி எங்களுக்கு அளித்துள்ளார்கள்.

பிரதமர் மோடி எங்களை சந்திக்கும் போதெல்லாம் அதிமுக ஒன்றிணைய வேண்டும்.  முன்பு போல மீண்டும் எழுச்சி பெற வேண்டும்.அதுதான் எனது விருப்பம் என்று கூறுவார். ஆனால் எடப்பாடி தரப்பு அதிமுகவை இக்கட்டான ஒரு சூழ்நிலையில் தள்ளிவிட்டது. மேலும் அவர் இறுதியாக இரட்டை இலை சின்னம் அதிமுகவுக்கு கிடைக்காமல் போனால் அதற்கு இந்த பன்னீர்செல்வம் எப்போதும் காரணமாக இருக்க மாட்டார் என்று கூறினார்.