தளபதி 68 திரைப்படத்தின் கதை இதுதான்!! எதிர்பார்ப்பை அதிகரிக்கும் தகவல்!! 

0
126
#image_title
தளபதி 68 திரைப்படத்தின் கதை இதுதான்!! எதிர்பார்ப்பை அதிகரிக்கும் தகவல்!!
நடிகர் விஜய் அடுத்ததாக நடிக்க விருக்கும் அவருடைய 68வது படமான தளபதி68 திரைப்படத்தை பற்றி சிறிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது.
நடிகர் விஜய் தற்பொழுது இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அவர்கள் இயக்கி வரும் லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தை செவன் ஸ்கீரின் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. ராக்ஸ்டார் அனிருத் லியோ திரைப்படத்திற்கு இசை அமைக்கிறார். லியோ திரைப்படம் இறுதிகட்ட படப்பிடிப்பை எட்டியுள்ளது. லியோ திரைப்படம் அக்டோபர் மாதம் 19ம் தேதி வெளியாகவுள்ளது.
லியோ திரைப்படத்திற்கு பிறகு நடிகர் விஜய் அடுத்ததாக நடிக்கப் போகும் தளபதி68 திரைப்படத்தை இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கப் போவதாக சமீபத்தில் அதிகாரப்பூர்வமான தகவல்களை படத்தின் தயாரிப்பு நிறுவனம் ஏ.ஜி.எஸ் எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் அறிவித்தது. இதை அடுத்து இந்த திரைப்படத்தின் கதை பற்றி சிறிய தகவல் வெளியாகியுள்ளது.
தளபதி68 திரைப்படத்தின் கதை வந்து தந்தை மற்றும் மகனுக்கு இடையில் நடக்கும் சம்பவங்களை வைத்து உருவாக உள்ளது என்று கூறப்படுகின்றது. ஏற்கனவே நடிகர் விஜய் நடித்த வாரிசு திரைப்படத்தில் தந்தை மகன் சென்டிமென்ட் இருந்தது. இதையடுத்து மீண்டும் இதே போல ஒரு கதையை நடிகர் விஜய் அவர்கள் தேர்ந்தெடுத்துள்ளார். ஆனால் இந்த முறை.இயக்குநர் வெங்கட் பிரபு திரைப்படம் என்பதால் தளபதி68 திரைப்படம் நன்றாக வரும் என்று ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.