மோடி மற்றும் எடப்பாடி பழனிச்சாமிக்கு உள்ள சீக்ரெட் இதுதான் – மனம் திறந்த முன்னாள் அமைச்சர்!

0
134
This is the secret of Modi and Edappadi Palaniswami - open minded ex-minister!
This is the secret of Modi and Edappadi Palaniswami - open minded ex-minister!

மோடி மற்றும் எடப்பாடி பழனிச்சாமிக்கு உள்ள சீக்ரெட் இதுதான் – மனம் திறந்த முன்னாள் அமைச்சர்!

அதிமுக ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் இன்று இரு அணிகளாக பிரிந்து காணப்படுகிறது. ஒற்றை தலைமை என்ற விவகாரம் ஆரம்பித்தது முதல் மற்ற கட்சிகளுக்கு இது பேசும் பொருளாக உள்ளது. அதிமுகவில் இவ்வாறு உட்கட்சி மோதல் இருக்கும் நிலையில் பாஜகவோ இதில் தலையிடாமல் மௌனம் காத்து வருகிறது. இவ்வாறு இருக்கும் பட்சத்தில் பிரதமர் வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைத்துவிட்டு, திண்டுக்கல்லில் நடக்கும் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ள வந்தார்.

இவர் தனி விமான மூலம் மதுரையில் தரையிறங்கினார். இவரை வரவேற்க ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் தனித்தனியாக செல்வார்கள் என்று எதிர்பார்த்த நிலையில், இருவரும் ஒன்றாகவே சென்று வரவேற்றனர். அரசியல் சுற்று வட்டாரங்களில், இவர்கள் கட்சியின் நலன் கருதி ஒன்று சேரவே மோடி அவர்கள் ஒன்று சேர்ந்து வர கூறியதாக பேசி வருகின்றனர். இவர்கள் அருகருகே நின்று மோடியை வரவேற்றதால்  ஒற்றை தலைமை விவகாரம் நீங்கி மீண்டும் இணையப் போகிறார்கள் என்று பேசப்பட்டு வந்தது.

ஆனால் அவ்வாறான பேச்சுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் ஒரு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். இன்று மதுரையில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிக்கு சென்று அங்குள்ளவர்களுக்கு உணவு மற்றும் அவர்களுக்கு தேவையான பொருட்களை வழங்கினார். அவ்வாறு வழங்கிவிட்டு அங்குள்ள நிருபர்களிடம் பேட்டி அளித்தார். அதில், திண்டுக்கல்லில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ள பிரதமர் மோடி வந்த பொழுது பலரும் வரவேற்க மதுரை விமான நிலையத்திற்கு சென்றோம்.

அப்பொழுது பிரதமர் எடப்பாடி பழனிசாமி அவர்களிடம் மட்டுமே நலம் விசாரித்தார். ஓபிஎஸ் அவர்கள் அருகில் இருந்தும் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. இதை நான் அருகில் இருந்து கண்கூட பார்த்தேன். ஆனால் ஓபிஎஸ் உடன் பிரதமர் தனியாக சந்திப்பது அல்லது கட்சி மீண்டும் இணைவது என்று பல வதந்திகள் வந்த வண்ணமாக உள்ளது. அதேபோல பிரதமரை மீண்டும் வழி அனுப்பி வைத்த போதிலும் அவர் எடப்பாடி பழனிச்சாமி இடம் மட்டுமே பேசினார்.

பின்பு அங்கிருந்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இடம் பேசினார். இவ்வாறு பிரதமர் பழனிச்சாமிடம் மட்டும் பேசியது எங்களுக்கு கிடைத்த அங்கீகாரமாக பார்க்கிறோம். ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் அருகில் இருந்தாலும் இருவரும் பேசிக் கொள்ளவில்லை. இதுதான் அங்க நடந்தது என்று அவர் விளக்கி கூறினார்.