இளங்கோவனை வேட்பாளராக திமுக தேர்வு செய்ய காரணம் இதுதான்! வெளியே வந்த பரபரப்பு பின்னணி!

0
69

இளங்கோவனை வேட்பாளராக திமுக தேர்வு செய்ய காரணம் இதுதான்! வெளியே வந்த பரபரப்பு பின்னணி! 

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்காக திமுக இவிகேஎஸ் இளங்கோவனை வேட்பாளராக தேர்வு செய்த பின்னணி தற்போது தெரிய வந்துள்ளது.

ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவாக இருந்த திருமகன் மறைவையொட்டி அந்த தொகுதியில் வருகின்ற பிப்ரவரி 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த இடைத்தேர்தலில் திருமகனின் தந்தையும் காங்கிரசின் முன்னாள் தலைவருமான இவிகேஎஸ் இளங்கோவன் காங்கிரஸ் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

தேர்தலில் போட்டியிட தான் விரும்பவில்லை என்று அவரே கூறிய பின்னரும் அவரையே வேட்பாளராக தேர்வு செய்துள்ளனர். இதுகுறித்து திமுக நிர்வாகிகள் கூறுகையில்,

இந்த தேர்தலில் இளங்கோவன் குடும்பத்தாருக்கு மட்டுமே வேட்பாளராக வாய்ப்பு தருவதில் கட்சி மேலிடம் உறுதியாக இருந்தது. உள்ளூர் சிறப்பு பிரிவு போலீசார் மற்றும் உளவுத்துறை போலீசார் தேவையான விவரங்களை திரட்டி அறிக்கையை தாக்கல் செய்தனர்.

அந்த அறிக்கையில் இளங்கோவன் குடும்பத்தில் அவர் மட்டுமே அதிக செல்வாக்கு உடையவர். அவருக்கு மக்கள் செல்வாக்கு மட்டுமின்றி எதிர்க்கட்சிகளுடன் தொடர்பு கொண்டவர். அவர் குடும்பத்தில் அவரை நிறுத்துவது வெற்றிக்கு வழிவகுக்கும். இந்த அறிக்கை அடிப்படையில் இளங்கோவன் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

எந்த விமர்சனத்தை வைத்தாலும் கடுமையாக சாடும் இவர் திமுக மற்றும் தமிழக அரசால் பேச முடியாத இடங்களில் திமுகவின் குரலாக ஒலிக்க பொருத்தமானவர். 2024ஆம் ஆண்டு லோக்சபா தேர்தலில் காங்கிரசுக்கு இவரது பிரச்சாரம் பலம் சேர்க்கும். தங்களுக்காக பேசும்படி வலியுறுத்தலாம்.

அவரது மகன் மற்றும் உறவினர்களிடம் இத்தகைய திறமைகளை எதிர்பார்க்க முடியாது. எனவே அவரது குடும்பத்தில் பலம் பொருந்தியவர் அவரே!என உளவுத்துறை அறிக்கையை தெள்ளத் தெளிவாக விவரித்து காட்டியுள்ளது.

இதன் பிறகு தான் முதல்வர் ஸ்டாலின் இவிகேஎஸ் இளங்கோவன் வீட்டிற்கு நேரில் சென்று அவரை சந்தித்து பேசினார். அடுத்து காங்கிரஸ் தலைமைக்கும் திமுகவின் விருப்பம் தெரிவிக்கப்பட்டு அதன் பின்னர்  தொடர்ந்து அவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். என்று திமுக நிர்வாகிகள் கூறினர்.