தொடர்ந்து புறக்கணிக்கப்படும் வன்னியர் சமுதாயம்! ராமதாஸ் கடும் வேதனை!

0
55

தகுதியும் திறமையும் இருந்தாலும் கூட உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் நியமனம் செய்வதில் தொடர்ந்து வன்னியர்கள் புறக்கணிக்கப்பட்டு வருவது மிகுந்த ஏமாற்றமாக இருக்கிறது இது மிகப்பெரிய சமூக அநீதியாகும் என்று டாக்டர் ராமதாஸ் வேதனை தெரிவித்திருக்கின்றார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், சென்னை உயர்நீதிமன்றத்திற்கு அனுமதிக்கப்பட்ட 75 நீதிபதிகள் பணியிடங்களில் 63 பணியிடங்கள் நிரப்பப்பட இருக்கின்றன காலியாக இருக்கும் பன்னிரெண்டு இடங்களில் 9 இடங்கள் வழக்கறிஞர்களை கொண்டும், அந்த 3 இடங்களை மாவட்ட நீதிபதிகளைக் கொண்டு நிரப்பப்படும் வழக்கறிஞர்களை கொண்டு நிரப்பப்பட வேண்டிய 9 நீதிபதிகள் பணியிடங்களில் 5 பணியிடங்கள் வழக்கறிஞ்சர்களின் பெயர்கள் உச்சநீதிமன்ற நீதிபதிகள் குழு பரிந்துரை செய்யப்படுகின்றது.

ஆனாலும் 5 பரிந்துரைகளில் ஒருவர்கூட வன்னியர் கிடையாது என்பது மிகவும் வேதனை அளிக்கின்றது. இப்பொழுது மட்டும் கிடையாது, கடந்த சில வாரங்களுக்கு முன்பு கூட 10 நீதிபதி பணியிடங்கள் நிரப்பப்பட்டன அந்த பட்டியலில் கூட ஒரு மீது விதி கூட வன்னியர் சமூகத்தைச் சார்ந்தவர் இல்லை.

உயர்நீதிமன்றத்திற்கு சமீபத்தில், நியமனம் செய்யப்பட்ட 10 நீதிபதிகள் இப்பொழுது பரிந்துரைக்கப்பட்ட இருக்கின்ற 5 நீதிபதிகள் ஆகிய 15 நீதிபதிகள் பணியிடங்களில் குறைந்த பட்சம் மூன்று இடங்களை ஆவது வன்னியர்களுக்கு ஒதுக்கி இருக்க வேண்டும் ஆனாலும் அவர்களுக்கு வாய்ப்புகள் கொடுக்கப்படவில்லை. சென்னை உயர்நீதிமன்றத்திற்கு 2018 ஆம் வருடம் ஜூன் மாதத்தில் நடந்த நீதிபதிகள் நியமனத்தில் தான், கடைசியாக வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது. அதன்பின்னர் இப்போது பரிந்துரை செய்யப்பட்ட நீதிபதிகளையும் சேர்த்து மொத்தமாக, 17 நீதிபதிகள் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள். அவர்களில் ஒருவர் கூட வன்னியர் சமுதாயத்தை சார்ந்தவர் கிடையாது. இந்த அநீதியை எவ்வகையிலும் நியாயப்படுத்த இயலாது.

உயர்நீதிமன்றங்கள், மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள், நியமனம் செய்ததில் இட ஒதுக்கீடு நடைமுறையில் கிடையாது, ஆனாலும் கூட உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் எல்லா சமூகங்களுக்கும் செல்வங்களுக்கும் பிரதிநிதித்துவம் கொடுக்கப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் சட்ட ஆணையமும் பல தருணங்களில் தெரிவித்திருக்கின்றன வன்னியர்களுக்கு பிரதிநிதித்துவம் அளிப்பதற்காக திறமைகள், மற்றும் தகுதிகளில், சமரசம் செய்து கொள்ள வேண்டும் என ஒருபோதும் நான் தெரிவித்தது கிடையாது. உயர்நீதிமன்ற நீதிபதிகளாக பல காலகட்டங்களில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களை விட தகுதியும், திறமையும், இருக்கின்ற வன்னியர் சமுதாயத்தைச் சார்ந்த வழக்கறிஞர்கள், பலர் இருந்து வருகிறார்கள் ஆனாலும் அவர்கள் வன்னியர்கள் என்ற காரணத்துக்காகவே, திட்டமிட்டு புறக்கணிக்கப்படும் நிலையே சமூக அநீதி என்று தெரிவிக்கின்றேன்.

சென்னை உயர்நீதிமன்றத்திற்கு நீதிபதிகளை நியமனம் செய்வதற்காக, கடந்த 2019ஆம் வருடத்தில் ஒரு பட்டியலை உச்சநீதிமன்ற நீதிபதிகள் குழு உடைய ஆய்விற்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுப்பி வைத்திருந்தது. ஆனாலும், அந்த பட்டியலை உச்சநீதிமன்றம் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளவில்லை, அதற்கு மாற்றாகவே இப்போது ஐந்து பேர் கொண்ட பட்டியலை அனுப்பி வைத்து இருக்கின்றது.

இதற்கு முன்னால் வந்த பட்டியலில், என்னென்ன சமூகத்தைச் சார்ந்தவர்களின் பெயர்கள் இடம் பெற்றிருந்தது. அந்த சமூகங்களுக்கு இப்போது அனுப்பப்பட்டிருக்கிறது. பட்டியலில் பிரதிநிதித்துவம் அளிக்கப் பட்டிருக்கிறது, ஆனாலும் இதற்கு முன்பான பட்டியலில் வன்னியர் ஒருவர் இடம் பிடித்திருந்த நிலையில் அவருக்கு பதிலாக புதிய பட்டியலில் வன்னியர் எவரும் சேர்க்கப் படவில்லை. எனவே இதுவே வன்னியர்கள் புறக்கணிக்கப்படுவதற்கு சிறந்த உதாரணமாக இருந்து வருகிறது.

75 நீதிபதிகள் கொண்ட சென்னை உயர்நீதிமன்றத்தில் வன்னியர் சமுதாயத்தை சேர்ந்த 5 பேர் மட்டுமே நீதிபதிகளாக இருக்கிறார்கள் அவர்களில், இரண்டு பேர் அடுத்த சில மாதங்களில் ஓய்வு பெறவிருக்கும் நிலையில், வன்னியர் சமூகத்தினருக்கு வாய்ப்பு அளிக்காவிட்டால் பிரதிநிதித்துவம் இல்லாமல் போய்விடும், வன்னியர்கள் மட்டுமல்லாமல் மேலும் பல சமுதாயங்களை சார்ந்த வழக்கறிஞர்களும் புறக்கணிக்கப்பட்டு வருகிறார்கள். இந்தியா என்பது ஒரு பன்முகத்தன்மை கொண்ட நாடு என்பது எந்த அளவிற்கு உண்மையானதோ அதே அளவிற்கு பல சமுதாயங்களில் கொண்ட ஒரு நாடு என்பதும் உண்மை. தகுதியின் அடிப்படையிலேயே அனைத்து சமுதாயங்களும் பிரதிநிதித்துவம் அளிக்கப் படுவது மட்டுமே உண்மையான சமூக நீதியாக இருக்கும்.

ஆகவே சென்னை உயர்நீதிமன்றத்தில் தற்சமயம் காலியாக இருக்கின்ற நீதிபதிகள் பணியிடங்களுக்கு பரிந்துரை பட்டியலை உச்சநீதிமன்றத்திற்கு அனுப்பும் நேரத்தில், அதிலே வன்னியர்களுக்கும் புறக்கணிக்கப்பட்ட மற்ற சமுதாயங்களுக்கும் தேவையான பிரதிநிதித்துவம் அளிக்கப்பட வேண்டும், என்று கேட்டுக் கொள்கின்றேன் என்று டாக்டர் ராமதாஸ் தெரிவித்திருக்கின்றார்.