என்னுடைய ஓய்வை அறிவிக்க இது தான் சிறந்த தருணம்! தனது ஓய்வு குறித்து தோனி பேட்டி!!

0
118
#image_title

என்னுடைய ஓய்வை அறிவிக்க இது தான் சிறந்த தருணம்! தனது ஓய்வு குறித்து தோனி பேட்டி!

 

நேற்று(மே29) ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டிக்கு பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி அவர்கள் ஓய்வு குறித்து பேட்டி அளித்துள்ளார்.

 

கடந்த ஞாயிற்றுக் கிழமை அதாவது மே 28ம் தேதி நடக்கவிருந்த ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டி மழை காரணமாக நேற்று அதாவது மே 29ம் தேதி அஹமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில்  நடைபெற்றது.

 

இதில் டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட் இழபிற்கு 214 ரன்கள் எடுத்தது.215 ரன்களை இலக்காகக் கொண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி களமிறங்கியது. முதல் ஓவரில் மழை பெய்யத் தொடங்கியதால் போட்டி சிறிது நேரம் தடைப்பட்டு பிறகு டக்வெர்த் லீவிஸ் முறைப்படி நடத்தப்பட்டது.

 

டக்வெர்த் லீவிஸ் முறைப்படி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 15 ஓவர்களில் 171 ரன்கள் எடுக்க வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதையடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 15 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 17அ ரன்கள் எடுத்து வெற்றி பெற்று ஐபிஎல் வரலாற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது 5வது கோப்பையை வென்றது.

 

இதையடுத்து மகேந்திர சிங் தோனி அவர்கள் அவரது ஓய்வு குறித்து பேட்டி அளித்தார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி அவர்கள் ஓய்வு குறித்து “மிகவும் உணர்வுப்பூர்வமான இறுதிப் போட்டியாக இந்த போட்டியை பார்க்கிறேன். எனது கண்கள் குளமாக மாறிவிட்டது.  என்னுடைய ஓய்வை அறிவிக்க இதுதான் சிறந்த தருணம்.

 

ஆனால் எல்லா இடங்களிலும் எனக்கு கிடைத்த அன்பு அளவு கடந்தது. இங்கே இருந்து கிளம்பி விடுவது எளிமையான செயல். கடினமான செயல் என்னவென்றால் அடுத்த 9 மாதங்கள் பயிற்சி எடுத்து இன்னொரு ஐபிஎல் ஆடுவது. அது என்னிடம் இருந்து சென்னை ரசிகர்களுக்கு கிடைக்கும் பரிசாக இருக்கும். அது எனது உடலுக்கு எளிமையான ஒன்றாக இருக்காது” என்று கூறினார்.

 

மேலும் தொடர்ந்து பேசிய எம்.எஸ் தோனி அவர்கள் “ஓய்வு குறித்து யோசிக்க இன்னும் 6 முதல் 8 மாதங்கள் இருக்கிறது. சென்னை அணி ரசிகர்கள் அன்பையும் உணர்ச்சிகளையும் எனக்காக வெளிப்படுத்தியதற்காக அவர்களுக்கு நான் செய்ய வேண்டிய ஒன்று” இவ்வாறு என்று மகேந்திர சிங் தோனி கூறியுள்ளார்.