புதுசு கண்ணா புதுசு! இனி ஷாப்பிங் செய்ய ஏடிஎம் கார்டு தேவையில்லை இது மட்டும் போதும்!

0
67

அடிக்கடி ஷாப்பிங் மால்களுக்கு சென்று ஷாப்பிங் செய்யும் நபர்களுக்கு எளிதாக ஷாப்பிங் செய்வதற்கு பஞ்சாப் நேஷனல் வங்கி ஒரு அசத்தலான வசதியை அறிமுகப்படுத்தியிருக்கிறது. இதன் மூலமாக வாடிக்கையாளர்கள் ஏடிஎம் டெபிட் கார்டு உள்ளிட்டவை இல்லாமலேயே மிக எளிதாக ஷாப்பிங் செய்ய முடியும் என்கிறார்கள்.

பஞ்சாப் நேஷனல் வங்கி பிஎன்பி ஒன் என்ற சேவையை சமீபத்தில் அறிமுகப்படுத்தியது, இந்த ஆப் மூலமாக டெபிட் கார்டு இல்லாமலேயே டெபிட் கார்டு செய்யும் வேலைகளை முடித்து விடலாம் என தெரிவிக்கிறார்கள்.

அதாவது உங்களுடைய கையில் டெபிட் கார்டு இல்லாமல் போனாலும் கூட பிஎன்பி ஆப் மூலமாக டிஜிட்டல் டெபிட் கார்டு டவுன்லோட் செய்துகொள்ளலாம். இதன் மூலமாக மிகவும் சுலபமாக தடையின்றி ஷாப்பிங் செய்யலாம்.

கையில் எப்போதும் டெபிட் கார்டை வைக்க விரும்பாதவர்கள் அல்லது மறந்துவிட்டு சென்று விட்டாலோ அவர்களுக்கு இந்த முறை கைகொடுக்கும் என தெரிவிக்கப்படுகிறது.

தற்போது ஒரு கடைக்கு சென்று ஷாப்பிங் செய்தால் கையில் பணமாக யாரும் கொடுப்பதில்லை, அப்படி கொடுப்பதை அவமானமாக எண்ணுகிறார்கள்.

இதன் காரணமாக, ஏடிஎம் கார்டை கையில் வைத்துக் கொண்டால் அந்த ஏடிஎம் கார்டை வைத்து பணம் செலுத்தி விடலாம் இது காண்போரை மிகவும் எளிதாகவும், அதே சமயத்தில் ஸ்மார்ட்டாகவும், காட்டும்.

இதனால் அனைவரும் டிஜிட்டல் பரிவர்த்தனையை தான் விரும்புகிறார்கள்.

தற்போது உங்களுடைய கைபேசி எண் முதலில் பிஎன்பி 1 ஆப்பை டவுன்லோட் செய்து அதில் முதலில் லாகின் செய்ய வேண்டும், அதன் பிறகு அதில் டெபிட் கார்டு பிரிவை தேர்வு செய்யவும், இப்போது உங்கள் அக்கவுண்ட் நம்பர் மற்றும் டெபிட் கார்டு வகையை தேர்வு செய்யவும்,

அதன் பிறகு submit கொடுக்க வேண்டும், virutalcard ஆக்டிவேட் செய்வதற்கு ஒப்புதல் வழங்க வேண்டும், இதற்கு உங்களுடைய பரிவர்த்தனை கடவுச்சொல்லை பதிவிட வேண்டும்.

தற்போது உங்களுடைய டிஜிட்டல் டெபிட் கார்ட் தயாராகிவிடும், இந்த டெபிட் கார்டு மூலமாக ஷாப்பிங் மற்றும் மற்ற வேலைகளை முடித்துக் கொள்ளலாம். அதோடு எலக்ட்ரானிக் பில் உள்ளிட்ட பில் கட்டணம் செலுத்துவது போன்றவற்றுக்கும் இந்த டிஜிட்டல் டெபிட் கார்டை பயன்படுத்தி கொள்ளலாம்.