என் மனம் கவர்ந்த பேட்ஸ்மேன் இவர்தான் – சாகித் அப்ரிடி விளக்கம்

0
63
சீனாவில் உருவான கொரோனா வைரஸ் காரணமாக அனைத்து விதமான விளையாட்டு போட்டிகளும் மார்ச் மாதத்திலிருந்து தள்ளிவைக்கப்பட்டுள்ளன. இதனால் வீரர்கள் தங்கள் குடும்பத்தினர்களுடன் நேரத்தை செலவு செய்கின்றன. சில வீரர்கள் வீட்டில் இருந்த படியே சமூகவளைதலத்தில் ரசிகர்களுடன் உரையாடி வருகின்றன. இந்நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் அதிரடி ஆல்ரவுண்டர் சாகித் அப்ரிடி, ‘டுவிட்டர்’ மூலம் ரசிகர்கள் எழுப்பிய கேள்விக்கு 2 மணி நேரம் பதில் அளித்தார்.  உங்களை பொறுத்தவரை சிறந்த கேப்டன் டோனியா (இந்தியா) அல்லது ரிக்கிபாண்டிங்கா (ஆஸ்திரேலியா)? என்ற கேள்விக்கு கேப்டன்ஷிப்பில் பாண்டிங்கை விட டோனி சற்று உயர்ந்தவர் என்று மதிப்பிடுகிறேன்.
ஏனெனில் டோனி இளம் வீரர்களை கொண்ட புதிய அணியை சிறந்த முறையில் உருவாக்கியவர் என்று கூறினார். அடுத்ததாக தற்போது உலகின் சிறந்த பந்து வீச்சாளர் யார்? என்ற கேள்விக்கு ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் கம்மின்ஸ் என்று கூறினார். உங்களுக்கு பிடித்தமான பேட்ஸ்மேன் என்ற கேள்விக்கு வெஸ்ட் இண்டீசின் விவியன் ரிச்சர்ட்ஸ் என்று கூறினார்.  மேலும் இந்திய அணியில் உங்களை கவர்ந்த பேட்ஸ்மேன் என்ற கேள்விக்கு விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா என்று கூறினார். உங்களது வயது என்ன? என்ற கேள்விக்கு வயது என்பது வெறும் நம்பர் மட்டுமே என்று விளக்கம் அளித்தார்.
author avatar
Parthipan K