இது வெறும் ஆரம்பம் தான்! ஆவேசமான டிரம்ப்!

0
98

அமெரிக்காவின் நாடாளுமன்றத்திலே தன்னுடைய ஆதரவாளர்களை வைத்து வன்முறையை செய்ய தூண்டுகோலாக இருந்த ட்ரம்ப் மீது உலக அளவில் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. அதனுடைய ஒருபகுதியாக டிராம்பின் பதவி காலத்தின் மீதம் இருக்கின்ற அதிகாரப்பூர்வ கணக்குகளை தடுக்கும் முடிவை ஃபேஸ்புக் நிர்வாகம் அறிவித்திருக்கின்றது..

அமெரிக்கா நாடாளுமன்றத்தை ட்ரம்பின் ஆதரவாளர்கள் தாக்கியதை தொடர்ந்து, ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற அவருடைய சமூக வலைதளங்கள் அனைத்தும் முடக்கப்பட்டு இருக்கின்றன.

இந்த சமயத்தில் ட்ரப்பிற்க்காக தொடர்ச்சியாக எங்கள் சேவையையும் பயன்படுத்த அனுமதிப்பது அபாயங்கள் மிக பெரியதாக இருக்கும் என நாங்கள் நினைக்கின்றோம், என முகநூல் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் வியாழக்கிழமை ஒரு பதிவிலே தெரிவித்திருக்கிறார். தேர்தல் மோசடி தொடர்பான ஆதாரமற்ற கருத்துக்களை பரப்பு வதை தடுப்பதற்காக ட்ரம்பின் கணக்கை 24 மணி நேரத்திற்கு தடுப்பதற்கு பேஸ்புக் நிறுவனம் தொடக்கத்தில் நினைத்திருந்தது.

அதோடு பல சமூக ஊடகங்களும் பின் கணக்கை தற்காலிகமாக நீக்க ஆரம்பித்திருந்தன டொனால்ட் ட்ரம்பின் யூடியூப் சேனலில் 2.68 மில்லியன் சந்தாதாரர்கள் இருக்கிறார்கள் அவருடைய டுவிட்டர் வலைத்தளத்தில் 35 மில்லியன் பின்தொடர்பவர்கள் இருக்கிறார்கள்.

இதற்கு இடையே ஜோபைடனின் வெற்றியை அமெரிக்க நாடாளுமன்றம் நேற்று முறைப்படி அங்கீகரித்திருக்கிறது.

இதனைத் தொடர்ந்து, கருத்து தெரிவித்த டிரம்ப் தேர்தல் முடிவுகளில் நான் முற்றிலுமாக உடன்படவில்லை. ஆனாலும் ஜனவரி மாதம் 20ஆம் தேதி முறையான மாற்றம் ஏற்படும் சட்டபூர்வமான வாக்குகள் மட்டுமே என்னுவதை உறுதி செய்வதற்காக நாங்கள் தொடர்ச்சியாக போராடுவோம். அதேசமயத்தில் இது எங்கள் போராட்டத்தின் ஆரம்பம் மட்டுமே என்று தெரிவித்து இருக்கிறார் ட்ரம்ப்.