விவசாய கடன்கள் தள்ளுபடி! முதல்வரை பாராட்டிய மருத்துவர் அய்யா!

0
63

தமிழகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தமிழ்நாட்டில் கூட்டுறவு வங்கிகளில் இருந்து விவசாயிகள் வாங்கிய 12 ஆயிரத்து 110 கோடி மதிப்பிலான விவசாயக் கடன்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படுகின்றன என்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்றைய தினம் சட்டசபையில் அறிவித்திருக்கிறார். விவசாயிகளுடைய நலனை கருத்தில் கொண்டு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இந்த நடவடிக்கையை எடுத்து இருக்கிறார். இந்த நடவடிக்கையானது சரியான நேரத்தில் தான் எடுக்கப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது.

தமிழகத்தில் சென்ற டிசம்பர் மாதத்தில் தொடர்ச்சியாக பெய்த மழை காரணமாக, பல்வேறு இடங்களில் விவசாயிகள் மிகக்கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் அவர்களின் கவலையை போக்கும் விதமாக இந்த நடவடிக்கையை முதல்வர் எடுத்திருப்பதாக தெரிகிறது. அதோடு அவர்கள் இந்த மழை காரணமாக இழந்த இழப்புகள் எதையும் எந்த வகையிலும் ஈடுகட்டி விடமுடியாது. ஆகவே குறைந்தபட்சம் அரசின் இந்த அறிவிப்பு விவசாயிகள் உடைய பொருளாதார சூழ்நிலையை அது சரி செய்யும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் கிடையாது.

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் இந்த கடன் தள்ளுபடி அறிவிப்பு தொடர்பாக பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெகுவாக பாராட்டி இருக்கிறார். பருவம் தவறி மழை பெய்த காரணத்தால், விவசாயிகள் மிகவும் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.எல்லாவற்றையும் இழந்துவிட்ட விவசாயிகள் வாங்கிய கடனை எவ்வாறு ஈடு செய்வது என்று தெரியாமல் அல்லாடிக் கொண்டிருந்த நிலையில், முதல்வர் இப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார் என்று தெரிவித்திருக்கிறார்.

அதேபோல விவசாயிகளுடைய பயிர் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று சென்ற ஜனவரி மாதம் 15ஆம் தேதி பாமக சார்பில் ஒரு விரிவான அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில் தமிழக விவசாயிகள் யாரும் பெரிய பணக்காரர்கள் கிடையாது, அனைத்து விதமான பருவத்திலும் விவசாயம் செய்வதற்கு உபயோகப்படும் பொருட்களை விவசாயிகள் கடன் வாங்கி தான் வாங்குகிறார்கள் இப்போதும் கூட அவர்கள் நம்பிக்கையுடன் கடன் பெற்று தான் பயிர் செய்திருக்கிறார்கள்.

சென்ற காலங்களில் இல்லாத வகையில் இந்த வருடம் மிக அதிக அளவில் விளைச்சல் இருக்கும் அதன் காரணமாக, வருமானமும் அதிகமாக இருக்கும் என்ற அவர்களுடைய நம்பிக்கையை அடுத்தடுத்து பெய்த மழை சிதைத்து விட்டது. அறுவடை நேரங்களில் விவசாயிகளுடைய கண்களிலிருந்து வரவேண்டிய ஆனந்த கண்ணீர் இப்பொழுது அதற்கு முன்பாகவே சோக கண்ணீராக வர தொடங்கிவிட்டது. அவர்களுடைய சோகத்தையும் இழப்புகளையும் நாம் வார்த்தைகளால் சொல்லிவிட இயலாது. மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வழங்கப்படும் இழப்பீடு மிகவும் குறைவாகத்தான் இருக்கிறது என்று தெரிவித்திருந்தார்.

தமிழக அரசு தற்போது கொடுக்கும் இழப்பீட்டை வைத்து வாங்கிய கடனுக்கு வட்டியை கூட கட்டி விட இயலாது. பாதிப்படைந்த விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குவது மட்டுமல்லாமல் கூட்டுறவு வங்கிகளில் உழவர்கள் பெற்றிருக்கும் அனைத்து விதமான கடன்களையும் எந்தவித நிபந்தனையும் இல்லாமல் தள்ளுபடி செய்வதற்கு தமிழக அரசு ஆலோசனை செய்ய வேண்டும் என்று தெரிவித்திருந்தேன்.

சமீப காலங்களில் விவசாயிகள் உடைய கடன்களை ரத்து செய்ய வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைத்த ஒரே கட்சி நம்முடைய பாட்டாளி மக்கள் கட்சிதான் விவசாயிகளுடைய இந்த கடன் தள்ளுபடி செய்யப்பட்டதற்கு நாம் தான் முதல் காரணமாக இருக்கிறோம் என்பதில் மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது. விவசாயிகளுடைய நலன் காப்பதில் பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ச்சியாக முன்னிற்கும் என்று உறுதி கூறுகிறேன் என்று மருத்துவர் அய்யா ராமதாஸ் தெரிவித்திருக்கிறார்.