மக்களே முன்னெச்சரிக்கையாக இருங்கள்! இந்த வங்கியின் 50 கிளையை மூட போறாங்களாம்! ஏடிஎம் மையங்கள் குறைவதற்கு வாய்ப்பு இருக்காம்!

0
52

Yes Bank- இன் 50 கிளைகளை மூட உள்ளதாக புதியதாக தலைமை ஏற்ற நிர்வாக இயக்குனர் பிரசாந்த் குமார் தெரிவித்துள்ளார்.

2021 ஆம் நிதி ஆண்டில் தனது ஒட்டுமொத்த வலையமைப்பை குறைக்க உள்ளதாக தெரிவித்துள்ளது. அதனால் 50 கிளைகளை மூட உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. மேலும் புதிதாக எந்த ஒரு திறப்புகளும் இருக்காது என்றும் அறிவித்துள்ளது.

கடந்த மார்ச் மாதம் வணிக நிர்வாக பொறுப்பேற்ற குமார் செப்டம்பர் காலாண்டில் வங்கியின் இயக்க செலவுகளை குறைக்க வேண்டிய சூழ் நிலையில் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

வங்கியின் 1500 கிளைகளுக்கும் வாடகை சம்பந்தமான ஒப்பந்தங்களை பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறி உள்ளார். வாடகைகள் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக செயல்பாடாக அமைகிறது என்பதால் 20% வாடகையை குறைக்க முடிவு செய்துள்ளதாக தெரிவித்திருந்தார்.

பல கிளைகள் அருகிலேயே அமைந்து இருப்பதாலும் நிதி ரீதியாக சாத்தியக்கூறுகள் இல்லை என்று கூறியுள்ளார். மேலும் அதேபோல் ஏடிஎம் மையங்களும் குறைக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தெரிவித்து இருக்கிறார்.

இப்போதைக்கு இந்த மாதிரியான மாற்றங்கள் இருந்தாலும் 2022 ஆம் நிதியாண்டில் மேலும் கிளைகள் விரிவாக்கப்படும் என்றும், ஆனால் கிளைகள் சிறிய அமைப்பில் ஆக இருக்கும் என்றும் கூறியிருக்கிறார்.

மேலும் டிஜிட்டல் பயன்பாடுகளை அதிகம் ஊக்குவிப்பதே நோக்கம் என்றும் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் Yes வங்கி தனது 35 கிளைகளை வணிக மையமாக மாற்றியது குறிப்பிடத்தக்கது. இதனால் செலவு குறைந்துள்ளது எனவும் தெரிவித்துள்ளது.

இதனால் மக்கள் தங்கள் பயன்பாட்டிற்கு ஏற்றவாறு உங்களை தயார்படுத்திக் கொள்ளுங்கள்.

author avatar
Kowsalya