காரியதடை நீங்க வழிபடவேண்டிய சிறப்புத் திருக்கோயில்!

0
60

எவ்வளவோ முயற்சி செய்தும் சில காரியங்கள் அவ்வளவு எளிதில் நடந்து விடுவதில்லை.ஆனாலும் நாம் மீண்டும், மீண்டும், அதற்கான முயற்சிகளை மேற்கொள்வோம் ஆனாலும்கூட அந்த காரியம் அவ்வளவு எளிதில் நடந்து விடாது. இப்படி தொடர்ந்து முயற்சி செய்து செய்து பலர் சோர்வுற்றுவிடுகிறார்கள்.

அப்பாடி ஒரு காரியத்தை செய்வதற்காக பல முறை முயற்சித்து தோல்வி கண்ட மனிதர்கள் இறுதியாக சரணடைவது இறைவனைத்தான். ஒரு காரியத்தை செய்ய முயற்சித்த பிறகு அது நடைபெறவில்லையென்றால் அடுத்தபடியாக கடவுளிடம் வேண்டுவதை தான் மனிதன் வழக்கமாகக் கொண்டிருக்கிறான்.

ஏனென்றால் மனித சக்தியை மீறிய ஒரு சக்தி இருக்கிறது என்றால் அது கடவுள் தான் என்று பலரும் அதீத நம்பிக்கை கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் மனித சக்தியை மீறிய ஒரு சக்தி மனிதர்களின் தன்னம்பிக்கைக்குகிருக்கிறது என்பது பலருக்கும் தெரிவதில்லை. ஒரு காரியத்தை பலமுறை செய்து அது வெற்றி பெறவில்லை என்றால் நாம் எந்த விதத்தில் எங்கே தவறு செய்திருக்கிறோம் என்று யாரும் நினைத்துப் பார்ப்பதில்லை.

உடனடியாக தெய்வக்குற்றம் என தெரிவித்து கடவுளை நோக்கி சென்று வருவார்கள். கடவுள் என்ற ஒரு பிம்பம் மனித மனதுக்கு நிம்மதி கொடுக்கும் ஒரு கருவிதான் என்பதை இன்னமும் மனிதன் சரியாக புரிந்து கொள்ளவில்லை.

அந்த வகையில், மதுரையம்பதியில் பஞ்சபூத தலங்களில் நீர் ஸ்தலம் என்றும், மதுரையில் சம்பந்தர் பெருமான் பாடிய 2வது தளம் என்றும், பாண்டிய மன்னரால் கட்டப்பட்ட 4வது கோவில் என்றும், போற்றப்படுகிறது. திருவாப்புடையார் கோவில் மலைகளில் மேரு, பசுக்களில் காமதேனு, கொடையில் மேகம், என்று இருப்பதைவிட அளவிற்கு மிகப்பெரிய திருவுளம் கொண்டவர் திருவாப்புடையார் என்பது வரலாறு.

இவரை தரிசனம் செய்தால் மற்ற புண்ணிய தளங்களின் மூர்த்திகளை தரிசித்த பலன் கிடைக்கும் என சொல்கிறது இந்த ஸ்தல புராணம். அம்பாளின் திருநாமம் ஸ்ரீ சுகந்த குந்தளாம்பிகை, ஸ்ரீ அனுக்ஞை விநாயகர், ஸ்ரீ முருக பெருமான், ஸ்ரீ காசிவிஸ்வநாதர், ஸ்ரீ நடராஜர், உள்ளிட்டோரும் தனி சன்னதிகளில் இங்கே அருள்பாலிக்கிறார்கள். தல தீர்த்தம் இடப தீர்த்தம் தலவிருட்சம் கொன்றை என்கிறது தலபுராணம்.

இந்தத் தலத்து இறைவனுக்கு ஒரு நெய் விளக்கேற்றி வைத்து வழிபாடு செய்தால் அது 1000 பசுக்களை தானம் செய்ததால் கிடைக்கும் பலன் கிடைக்கும் என்கிறார்கள்.

மேலும் இத்தலத்து இறைவனை இளநீர் கொண்டு நீராட்டி வழிபாடு செய்தால் அது 100 அஸ்வமேத யாக பலன்களை வழங்கும் என்கிறார்கள்.

தாங்கள் செய்த தவறுகள் காரணமாக. எல்லாவற்றையும் இழந்து வறுமையிலுள்ளவர்கள் தங்களுடைய தவறுகளை உணர்ந்து இங்கே வந்து இறைவனை வழிபாடு செய்தால் அவர்கள் இழந்த அனைத்தையும் மீண்டும் பெறுவார்கள் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது.

இந்தக் கோவிலிலிருக்கும் முருகப் பெருமானை செவ்வாய் தோஷமுடையவர்கள் வழிபாடு செய்தால் அவர்களுடைய தோஷம் நீங்கி சிறந்த பலன் கிடைக்கப் பெறுவார்கள் என்கிறார்கள்.

இந்தக் கோவிலிலிருக்கும் சுகந்த குந்தளாம்பிகையை வழிபடுபவர்களுக்கு திருமணத்தடை நீங்கி மிக விரைவில் திருமணம் நடைபெறும் என தெரிவிக்கிறார்கள்.

கார்த்திகை மாதத்தில் திருவாப்புடையார் கோவிலில் சிறப்பு பூஜைகளும், விசேஷ வழிபாடுகளும், நடைபெறும். கார்த்திகை சோமவாரத்தில் திங்கள் கிழமையன்று சிவபெருமானுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

கார்த்திகையில் திருவாப்புடையாரை வணங்கினால் சகல செல்வங்களும் வந்து சேரும், வீட்டில் தரித்திரம் அகலும் தடைபட்ட காரியங்கள் இனிதே நடந்தேறும் என்கிறார்கள்.