கிரிவலமும் அதன் பயன்களும்

0
77

கிரிவலமும் அதன் பயன்களும்

கார்த்திகை தீபம் வரும் செவ்வாய்க்கிழமை கொண்டாடப்படுகிறது இதனால் திருவண்ணாமலையில் அதிக மக்கள் கிரிவலம் செல்வர். பெரும் சிறப்புமிக்க அண்ணாமலையே என் அந்தந்த நாட்களில் கிரிவலம் வந்தால் என்னென்ன பலன்கள் என்று பார்ப்போம்

அண்ணாமலையை ஞாயிற்றுக்கிழமை வலம் வந்தால் சிவலோக பதவி கிடைக்கும் திங்கட்கிழமை வலம் வருவோருக்கு இந்திர பதவி கிடைக்கும் செவ்வாய்க்கிழமை வலம் வந்தால் கடன் சுமை குறையும் வறுமை நீங்கும் புதன்கிழமை வலம் வந்தால் கலைகளில் தேர்ச்சியும் முக்தியும் பெறுவர் வியாழக்கிழமை வலம் வருபவர்கள் ஞானம் பெறுவர்.

வெள்ளிக்கிழமை வைகுண்ட பதவி கிடைக்கும் சனிக்கிழமை வந்தால் பிணிகள் நீங்கும் அம்மாவாசையில் வருபவர்களுக்கு முக்தி கிடைக்கும் பிரதோஷம் அன்று வலம் வந்தால் சகல பாவங்கள் நீங்கும் ஏகாதசியில் வலம் வந்தால் பீடைகள் தொலையும் சிவராத்திரியில் வலம் வந்தால் பிறவிப்பிணி அகலும்.

மாசிமகத்தில் வளம் வந்தாள் தேவர்களுக்கு நிகரான பதவி கிட்டும் காட்சியான புண்ணிய காலத்தில் வலம் வந்தால் தேவர்களால் கணிக்க முடியாத சிறப்பையும் உத்தராயன புண்ணிய காலத்தில் வலம் வந்தால் உயர்ந்த பதவியும் அடைவர்.


குறிப்பாக செவ்வாய்க்கிழமைகளில் வலம் வருவது கூடுதல் பலனைத் தரும் கர்ம வினைகளை நீக்கும் மேலும் செவ்வாய்க்கிழமை துர்க்கைக்கு உகந்த நாள் அன்னை மகிஷாசுரனை அழித்த நாள் அக்னிக்குரிய கிரகம் செவ்வாய் அக்னிக்குரிய தலம் திருவண்ணாமலை என்பதால் அதனால் அங்கு செவ்வாய் தோறும் சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகிறது இந்நாளில் மலைவலம் வருவது மகத்தான பலனைத் தரும்.

author avatar
CineDesk