மாணவி ஸ்ரீமதியை தொடர்ந்து பள்ளி விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட மற்றொரு மாணவி!

0
78

திருவள்ளூர் பகுதியில் 12ம் வகுப்பு மாணவி பள்ளி விடுதியிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரித்து வருகிறார்கள்.

திருத்தணி தெக்கலூர் காலனியைச் சார்ந்த மாணவி கீழச்சேரியில் செயல்பட்டு வரும் சாக்ரீட் ஹார்ட் பெண்கள் மேல்நிலைப்பள்ளி என்ற அரசு நிதி உதவி பெறும் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்திருக்கிறார். பள்ளிக்கு சொந்தமான செயிண்ட் ஆன்ஸ் ஹோம் ஃபார் சில்ட்ரன்ஸ் என்ற தனியார் விடுதியில் மாணவி தங்கி படித்து வந்திருக்கிறார்.

இந்த சூழ்நிலையில், இன்று விடுதியில் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் தொடர்பாக கேள்விப்பட்டவுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் உடலை கைப்பற்றி திருவள்ளூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உடற்கூறாய்வு செய்வதற்காக அனுப்பி வைத்தார்கள். இதற்கு நடவே மாணவியின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்து அவருடைய சொந்த கிராமமான தெக்கலூரில் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஆகவே பாதுகாப்பை கருத்தில் கொண்டு காவல்துறையினர் மாணவியின் சொந்த ஊரான தெக்கலூர் காலணியில் குவிக்கப்பட்டிருக்கிறார்கள். அதே போல திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும், தடுப்புகளை உண்டாக்கி நூற்றுக்கும் அதிகமான காவல் துறையைச் சார்ந்தவர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருக்கிறார்கள்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கணியாமூரில் சக்தி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில் தற்கொலை செய்து கொண்டார் என்று சொல்லப்பட்ட மாணவி ஸ்ரீமதியின் இறப்பு தொடர்பான துயரமே இன்னும் மறையாத வடுவாக இருந்து வருகிறது. அவருடைய இறப்புக்கு உண்மையான காரணம் என்ன? என்பதை இதுவரையில் காவல்துறையினர் தெளிவுபடுத்தாத நிலையில், தற்போது மீண்டும் இப்படி ஒரு சம்பவம் சம்பவம் தமிழகத்தில் நடைபெற்றிருப்பது பொதுமக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.