திருமாவளவன் கொல்லப்படலாம்! அதிர்ச்சியில் அவரது தொண்டர்கள்

0
128
VCK Thirumavalavan
VCK Thirumavalavan

திருமாவளவன் கொல்லப்படலாம்! அதிர்ச்சியில் அவரது தொண்டர்கள்

 

தமிழகத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆளும் திமுகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தது.அடுத்து மக்களவை தேர்தலிலும் இந்த கூட்டணி தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த மக்களவைத் தேர்தல் வரும் 2024 மே மாதம் நடக்கவுள்ளது.

 

இந்நிலையில் மாநில அளவில் திமுகவுடன் இணைந்து கொண்டு மத்தியில் ஆளும் பாஜகவை விசிக கடுமையாக எதிர்த்து வருகிறது.அந்த வகையில் வரவுள்ள மக்களவை தேர்தலுக்கு மாநிலங்கள் அளவில் பாஜகவை எதிர்த்து வெல்ல மெகா கூட்டணி அமைக்கப்படும் என மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பேனர்ஜி தெரிவித்திருந்தார்.

 

அதன் அடிப்படையில் பாஜகவை எதிர்த்து வீழ்த்த எதிர்க்கட்சி தலைவர்கள் அனைவரும் ஒரே பக்கத்தில் இருக்க வேண்டும். பாஜக தங்களுக்கு எதிர் பக்கம் இருக்க வேண்டும் என்றும் வியூகங்களை எதிர்கட்சிகள் வகுத்து வருகின்றன. இந்நிலையில், 2024 ஆம் ஆண்டு தேர்தலில் பாஜக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைத்து விட்டால் என்னை சுட்டுக்கொல்லவும் வாய்ப்புள்ளதாக திருமாவளவன் பேசியுள்ளது அக்கட்சியினர் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

2024 ஆண்டு தேர்தலுக்கு பிறகு இந்திய அரசியல் சூழல் முற்றிலும் மாறப்போகிறது. வரவுள்ள மக்களவை தேர்தலில் மீண்டும் பாஜக ஆட்சி அதிகாரத்துக்கு வந்துவிட்டால் ஒரு நள்ளிரவு மேடையில் மோடியோ அல்லது மோடியால் உருவாக்கப்படுகிற ஒரு கேடியோ தொலைக்காட்சியில் பேசுவார்கள் அப்போது, இதுவரை நடைமுறையில் இருந்து வரும் அரசியலமைப்பு சட்டம் இனி செல்லாது. மனுதர்மமே இனி அரசியலமைப்பு சட்டமாக இருக்கும் என்று சொல்வார்கள். அப்போது நாம் எதுவுமே செய்ய முடியாது. மிசா காலத்தில் எல்லோரும் எப்படி பந்தாடப்பட்டார்களோ அப்படியே இந்த 2024 ஆம் ஆண்டு மக்களவை தேர்தலுக்கு பின்னரும் நடக்கும். திருமாவளவன் ஒருவேளை சுட்டு கொல்லப்பட்டும் இருக்கலாம்.

 

இப்படித்தான் 2024 ஆம் ஆண்டு தேர்தலுக்கு பிறகு நடக்கும். 2024 மக்களவை தேர்தலுக்கு பிறகு முற்போக்கு மற்றும் ஜனநாயக சிந்தனை கூடாது. இளம் தலைமுறையினரிடையே ஜனநாயக அரசியலை பரப்பக்கூடாது. உத்தரப் பிரதேசத்தில் அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிராக 700 பக்கங்களை கொண்ட புதிய சட்ட புத்தகம் கூட தயாராகி விட்டது. இந்த சட்டம் நடைமுறைக்கு வரும்போது இந்தியா என்ற பெயர் இந்து ராஷ்டிரா என பெயர் மாற்றம் அடைந்திருக்கும். டெல்லி தலைநகரமாக இருக்காது வாரணாசி தான் நமக்கு தலைநகரமாகும்.

 

இஸ்லாமியர்களும், கிறிஸ்தவர்களும் இங்கு வாழலாம், தொழில் செய்யலாம் ஆனால் வாக்கு செலுத்த முடியாது. எனவே மனுஷமிருதி தான் அரசியலமைப்பு சட்டம் என்றும் அதிகாரபூர்வமாக அறிவிக்கவும் காத்திருக்கிறார்கள்.

 

இதற்காக குறிக்கப்பட்ட தேதி மே 2024 ஆம் ஆண்டு என திருமாவாவன் பேசியிருப்பது அக்கட்சியினர் மத்தியில் கலக்கம் அடைய செய்துள்ளது.