பெரியார் பிறந்த மண்ணில் ஜெய் ஸ்ரீ ராம் என்ற முழக்கத்தை நாம் அனுமதிக்கலாமா? ஆர் எஸ் எஸ் அமைப்பை பார்த்து கதறும் திருமாவளவன்!

0
79

இந்து மதத்தின் மீதும், இந்துமத நம்பிக்கைகள் மீதும் அதீத நம்பிக்கை வைத்திருக்கும் ,அதோடு தேசப்பற்று மிக்க ஒரு அமைப்பு என்று சொல்லப்படும் ஆர்எஸ்எஸ் அமைப்பு தமிழகத்தில் அக்டோபர் மாதம் 2ம் தேதி சுமார் 150-க்கும் மேற்பட்ட இடங்களில் அணிவகுப்பு நடத்துவதற்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

ஆனால் அன்றைய தினமே தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மத நல்லிணக்க மனித சங்கிலி போராட்டம் நடத்தப்படும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் ஒரு அறிவிப்பை வெளியிட்டார்.

அன்றைய தினம் தமிழ்நாடு முழுவதும் கிராம சபை கூட்டங்கள் நடைபெறும் என்பதால் இந்த பேரணிக்கு காவல் துறையினர் பாதுகாப்பு வழங்க முடியாது ஆகவே அணிவகுப்புக்கு அனுமதி இல்லை என்று தமிழக காவல்துறை சார்பாக அனுமதி மறுக்கப்பட்டது.

இந்த அனுமதி மறுப்பை தொடர்ந்து இதற்கு எதிராக ஆர் எஸ் எஸ் அமைப்பு சார்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதனை விசாரித்த உயர்நீதிமன்றம் நவம்பர் மாதம் 6ம் தேதி ஆர் எஸ் எஸ் அமைப்பு அணிவகுப்பு நடத்துவதற்கு நிச்சயமாக காவல்துறை அனுமதி வழங்க வேண்டும் இல்லை என்றால் கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்கள் நீதிபதிகள்.

எப்போதுமே இந்து மத நம்பிக்கைகள் மீதும் இந்து மக்கள் மீதும் தன்னுடைய கீழ்த்தரமான அரசியலை செய்யும் விதமாக பேசும் திருமாவளவன் போன்றோர் இந்த ஆர் எஸ் எஸ் அமைப்பு நடத்தப்படும் அணிவகுப்பை தடுத்து நிறுத்த வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக பல்வேறு குளறுபடிகளை செய்து வருகிறார்கள் என்று சொன்னால் அது மிகையாகாது.

எப்போதும் திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் பொதுமக்களுக்கு நன்மை செய்யும் விதமாக எதையாவது செய்து அதன் மூலமாக அரசியல் செய்திருக்கின்றன வா என்று கேட்டால் தமிழகத்தில் பெரும்பாலான மக்கள் இல்லை என்று தான் சொல்வார்கள்.

மாறாக இந்து மக்களை கொச்சைப்படுத்தும் விதமாக பேசுவது, இந்து பெண்களை விபச்சாரி என்று தெரிவிப்பது, இந்து கோவில்களை கொச்சைப்படுத்தும் விதமாக பேசுவது இது போன்ற கீழ்த்தரமான அரசியலை தான் திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் இதுவரையில் செய்து வருகின்றன.

குறிப்பாக திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் இந்து மதத்திற்கு ஒரு மிகப்பெரிய எதிரிகளாகவே பார்க்கப்படுகின்றன ஆனால் திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து திமுக எப்போதும் இந்துக்களுக்கு எதிரான கட்சி இல்லை என்று தெருத்தெருவாக பிரச்சாரம் செய்யாத குறையாக தெரிவித்தாலும் அந்த கட்சி மறைமுகமாக இந்து மத எதிர்ப்புக் கொள்கையை பின்பற்றுகிறது என்பது ஊரறிந்த உண்மைதான்.

இவ்வளவு ஏன் கடவுள் இல்லை என்ற சித்தாந்தத்தை முன் வைத்து தான் திராவிடர் கழகமே தோற்றுவிக்கப்பட்டது அந்த திராவிடர் கழகத்திலிருந்து பிரிந்து வந்தது தான் இந்த திராவிடர் முன்னேற்ற கழகம் அந்த திராவிடர் கழகத்திலிருந்து பிரிந்து வந்திருந்தாலும் கூட அந்த திராவிடர் கழகம் என்ன கொள்கையை முன்வைத்து அரசியல் செய்கிறதோ அதே கொள்கையை தான் திமுகவும் கையாளுகிறது.

சாதாரண நாட்களில் அமைதியான முறையில் இருந்தாலும் தேர்தல் என்று வந்துவிட்டால் அந்த சமயத்தில் மட்டும் திமுக தலைவர்கள் மனதில் இருக்கும் அந்த இந்து மத எதிர்ப்பு கொள்கை ஈட்டி பார்க்கும் அப்போது அவர்கள் பேசும் ஒவ்வொரு மேடையிலும் இந்துத்துவக் கொள்கைக்கு எதிரான கருத்துக்கள் பலவற்றை முன் வைப்பார்கள்.

அதன் மூலமாக தான் நாம் ஆட்சியைப் பிடிக்க முடியும் என்பது அவர்களுடைய கருத்து ஏனென்றால் இந்து மக்கள் தமிழகத்தில் பெரும்பாலான வாழ்ந்தாலும் கூட அவர்களுக்கிடையில் ஒற்றுமையின்மையும் மதப் பற்றின்மையும் காணப்படுகிறது.

ஆகவே அவர்களை புறம் தள்ளிவிட்டு சிறுபான்மையினரை தங்கள் பக்கம் ஈர்க்கும் வேலையில் திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் இறங்கி விடுவது வழக்கம்.

ஆண்டாண்டு காலமாக தமிழகத்தில் திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் இப்படித்தான் அரசியல் செய்து வருகின்றனர். திமுக கூட்டணியில் நீண்ட காலமாக ஒட்டிக்கொண்டு இருக்கும் ஒரு சில முக்கிய கட்சிகளிடம் நீங்கள் எதற்காக இதே கூட்டணியில் இத்தனை ஆண்டுகளாக தொடர்கிறீர்கள் என்று கேட்டால், அவர்கள் சொல்லும் பதில் ஒன்றுதான்.

அதாவது எங்கள் கூட்டணி கொள்கை ரீதியாக வலுவான முறையில் அமைக்கப்பட்ட கூட்டணி என்று தெரிவிப்பார்கள். சற்றே ஆழமாக சிந்தித்துப் பார்த்தால் அது உண்மையான கருத்து தான் என்று தோன்றும்.

ஏனெனில் திமுகவும் அந்த திமுகவுடன் கூட்டணியில் இருக்கும் மற்ற கட்சிகளும் கடவுள் இல்லை என்றும் இந்து மத கொள்கைகளை இழிவுபடுத்தும் விதமாகவும் தான் பேசி வருவார்கள் அவர்கள் இதுவரையில் அப்படித்தான் தங்களுடைய அரசியலை செய்து வந்தார்கள்.

ஆனால் இந்து மத நம்பிக்கை மிக்க ஆர்எஸ்எஸ் போன்ற ஒரு இயக்கம் தமிழகத்தில் கால் பதித்து விட்டால், மக்களிடையே மிகப்பெரிய சக்தியாக உருவெடுத்து விட்டால் திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் தங்களுடைய அரசியல் சித்தாந்தமாக வைத்திருக்கும் கடவுள் மறுப்புக் கொள்கையும், இந்து மத மறுப்புக் கொள்கையும் பொதுமக்களிடம் எடுபடாது என்பதுதான் நிதர்சனமான உண்மை.

ஆகவே தான் ஆண்டாண்டு காலமாக ஆர்எஸ்எஸ் அமைப்பை தமிழகத்தில் இருக்கக்கூடிய திமுக போன்ற கட்சிகள் பிரிவினைவாத இயக்கம் என்று தெரிவித்து வருகின்றன. மேலும் அந்த அமைப்பை எதிர்க்கும் ஒரு ஆயுதமாக அந்த கட்சிகள் கையில் எடுத்தது மதச்சார்பின்மை என்ற வார்த்தை.

இந்த மதச்சார்பின்மை என்ற வார்த்தை தான் இந்து மதக் கொள்கையை தீவிரமாக பின்பற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பை எதிர்ப்பதற்கு மிகப்பெரிய ஆயுதமாக இருக்கும் என்றும் அவர்கள் கருதுகிறார்கள்.

ஆகவே தான் தங்களுடைய கொள்கையும் சித்தாந்தமும் ஒன்றுதான் நாங்கள் கொள்கை மற்றும் சித்தாந்தத்தின் அடிப்படையில் தான் வலுவான கூட்டணியை அமைத்துள்ளோம் என்று திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் தெரிவித்து வருகின்றன.

அதோடு தங்களுடைய கொள்கைக்கும் சித்தாந்தங்களுக்கும் எந்த ஒரு ஆபத்தும் வந்து விடக்கூடாது என்ற ஒரே காரணத்திற்காக ஆர் எஸ் எஸ் என்ற அமைப்பை தமிழக மக்களிடையே ஒரு மதவாத இயக்கமாக காட்டி வருகின்றன.

ஆனால் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்பட்டு விட்டால் இந்த இந்து மத கொள்கையை எதிர்த்து அரசியல் செய்யும் இவர்களின் நிலை அந்தோ பரிதாபம் என்ற நிலைக்கு சென்று விடும் அந்த நிலை தமிழகத்தில் வந்து விடக்கூடாது என்பதில் திமுகவும், அதன் கூட்டணி கட்சிகளும் உறுதியாக இருக்கின்றன.